For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இரண்டே நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்கள்... ராக்கெட் வேகத்தில் வைரலாகும் "நாங்க வேற மாறி"

  |

  சென்னை: நடிகர் அஜித்குமார் நடித்து வரும் வலிமை படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் நாங்க வேற மாறி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது..

  உனக்கென்ன உனக்கென்ன பாடலுக்குப் பிறகு அஜித்தின் வாழ்க்கைத் தத்துவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த பாடல் அதிக கவனத்தைப் பெற்று தொடர்ந்து வைரல் ஆகி வந்தது.

  உறுதியான அட்லீ – ஷாருக்கான் படம்...டீசர் இந்த முக்கிய நாளிலா உறுதியான அட்லீ – ஷாருக்கான் படம்...டீசர் இந்த முக்கிய நாளிலா

  இந்த நிலையில் பாடல் வெளியான இரண்டே நாட்களில் இப்பொழுது 10 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்து வருகிறது.

  அஜித் ரசிகர்கள்

  அஜித் ரசிகர்கள்

  அஜித்தின் திரைப்படங்கள் என்றாலே பெரும் எதிர்பார்ப்பும் பிரம்மாண்ட வரவேற்பும் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத்தரப்பு மக்களும் விரும்பக்கூடிய படமாக இருப்பதால் மக்கள் குடும்பம் குடும்பமாக இவரது திரைப்படங்களை கண்டுகளித்து வருகின்றனர். அந்த வகையில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

  வலிமை

  வலிமை

  அஜித் போனிகபூர் முதல் முறையாக இணைந்த நேர்கொண்டபார்வை மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கிய இரண்டே திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்கு இயக்குனர்களின் பட்டியலில் இணைந்த வினோத் அஜித் கூட்டணியில் மீண்டும் இணைந்து உள்ளார். வலிமை என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பைக் ரேஸராகவும் நடித்துள்ளார்.

  பைக் ரேஸிங்

  பைக் ரேஸிங்

  நிஜ வாழ்க்கையில் கார் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் வலிமை படத்தில் பல காட்சிகளில் பைக் ரேஸிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே பல ஸ்டண்ட் காட்சிகள் பைக் ரேஸிங் மையப்படுத்தி இருக்கும் என யூகிக்க முடிகிறது . இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்த படக்குழு இதில் நடிகர் அஜித்தை மிகவும் இளமையாகவும் ஹாலிவுட் ஹீரோ போல ஸ்டைலிஷாகவும் காட்டி இருந்தது பலருக்கும் ரசிக்கும்படி அமைந்தது.

  10 மில்லியன்

  10 மில்லியன்

  இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாங்க வேற மாறி வெளியாகி வேற லெவல் ஹிட்டடித்தது. இந்தப் பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகள் எழுதி இருக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பொதுவாக முன்னணி ஹீரோக்களின் பாடல்கள் வெளியான பின்னர் தான் சாதனை படைக்கும் ஆனால் நாங்க வேற மாறி பாடல் ஸ்ட்ரீமிங் ஆவதற்கு முன்பாகவே பல லட்சம் லைக்குகளை குவித்தது. எதிர் பார்த்தது போலவே இந்த திரைப்படம் பல லட்சம் வியூவ்ஸ்களை பெற்று வருகிறது. முன்னணி நடிகர்களின் பாடல்கள் என்றால் மில்லியன் பார்வையாளர்களை எட்ட குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஆகும் ஆனால் நாங்க வேற மாறி பாடல் வெளியான இரண்டே நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  குழம்பி இருந்த நிலையில்

  குழம்பி இருந்த நிலையில்

  வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என்று மாதக்கணக்காக பல பிரபலங்களிடம் கேள்வி கேட்டு கேட்டு கூகுள் ட்ரெண்டிங் செய்துவந்த அஜித் ரசிகர்கள், ஒரு கட்டத்தில் வலிமை அப்டேட் உண்மையில் எப்பொழுது வரும் யாரிடம் இருந்து வரும் என்று தெரியாமல் குழம்பி இருந்த நிலையில் , அதிகாரப்பூர்வமான இந்த ட்ரெய்லர் வந்ததும் பலவிதமான ஹேஷ்டேக் பயன்படுத்தி இணையதளத்தை அமளி துமளி செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தப் படத்தின் டிரெய்லர் ஆடியோவை வைத்து வித்தியாசமான புது டிரைலர்கள் உருவாக்கி அதை வெரைடியாக எடிட் செய்து வாட்ஸ்அப் வட்டாரங்களில் உலாவ விடுகின்றனர்.

  வகை வகையான புரோமோஷன்

  வகை வகையான புரோமோஷன்

  ஒரு பக்கம் பீஸ்ட் படத்தின் பிரமோஷன் வேலைகள் மிகவும் சைலண்ட்டாக சாமர்த்தியமாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் விளம்பர வேலைகளும் மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது இப்படிப்பட்ட பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அவற்றின் போட்டோஷூட்ஸ் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் நிகழும் சில போட்டோக்கள் எல்லா வகை புரோமோஷன்ஸுக்கும் பயன்படுகிறது. இந்த சூழலில் அஜித் நடித்த வலிமை பல போட்டிகளுக்கு நடுவே தனித்துவமாக ரசிகர்களின் ஆரவாரத்துடன் இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அல்டிமேட் ஸ்டார் அஜித் என்று மீண்டும் மீண்டும் தனது படைப்புகள் மூலமும் அந்த படைப்புகளில் கொண்டாட்டங்கள் மூலமும் அஜித்தின் உண்மையான வலிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

  Recommended Video

  Thala Ajith first ever reaction to Haters | Haters வெறுப்பை ஏத்துக்குறேன்
  மிகவும் உறுதுணையாக

  மிகவும் உறுதுணையாக

  அஜித் பொதுவாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பது , தொடர்ந்து முகத்தை டிவி சேனல்கலில் காட்டுவது, சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்ற எவற்றையும் செய்வதில்லை . ஆனால் இவை அனைத்தும் நன்கு புரிந்து ரசிகர்கள் தல தல என்று காலம் காலமாக அஜித்தின் நேர்மையையும் ரசிகர்களிடம் தனிப்பட்ட முறையில் அவர் காட்டும் அக்கறையும் விஸ்வரூப வெற்றி அடைய மிகவும் உறுதுணையாக இருக்கிறது . அஜித் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் இனி எத்தனை படங்கள் வந்தாலும் இந்த ஒரு வார்த்தைக்காக அவர் பண்புக்காக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  Ajith's Valimai team has released first single recently. The song has become viral and raging like fire in social media, has reached 10 million viewers within 2 days.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X