»   »  'வேலைக்காரன்' பாடல்கள் வெளியீடு... அனிருத்தின் அசத்தல் பெர்ஃபார்மன்ஸ்! #VelaikkaranAudioLaunch

'வேலைக்காரன்' பாடல்கள் வெளியீடு... அனிருத்தின் அசத்தல் பெர்ஃபார்மன்ஸ்! #VelaikkaranAudioLaunch

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன் தாரா நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

'வேலைக்காரன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பாடல்களும் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

இசை வெளியீட்டு விழா

'வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'கருத்தவன்லாம் கலீஜாம்...' மற்றும் 'இறைவா' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளர்கள்

வேலைக்காரன் இசை வெளியீட்டு நிகழ்வை தொகுப்பாளர்கள் டி.டி மற்றும் விக்னேஷ்காந்த் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். திரையுலகப் பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

இந்தப் படத்தில் ஃபகத் பாசில், ரோபோ ஷங்கர், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மோகன் ராஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

மிமிக்ரி பெர்ஃபார்மன்ஸ்

இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் கலக்கப்போவது யாரு புகழ் நவீன், மிமிக்ரி பெர்ஃபார்மென்ஸ் செய்து கலகலப்பூட்டினார். கவிஞர் அறிவுமதி, மேடையேறி கதாநாயகன் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஆகியோரைப் புகழ்ந்து பேசினார்.

அனிருத் லைவ்

இந்தப் படத்தின் பாடல்கள் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் லைவ்வாக பாடி அசத்தினார்.

பாடலாசிரியர்கள்

பாடலாசிரியர்கள்

திரையுலகைச் சேர்ந்த பலர் சிவகார்த்திகேயனுடனான தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா ஆகியோர் 'வேலைக்காரன்' படம் பற்றிப் பேசினர்.

English summary
'Velaikkaran' audio launch ceremony has held now. Sivakarthikeyan and nayanthara starrer 'Velaikkaran' songs are released officially.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil