»   »  'கருத்தவன்லாம் கலீஜாம்...' வெளியானது 'வேலைக்காரன்' சிங்கிள் ட்ராக்

'கருத்தவன்லாம் கலீஜாம்...' வெளியானது 'வேலைக்காரன்' சிங்கிள் ட்ராக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், 'வேலைக்காரன்'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை '24 AM STUDIOS' நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் பாடல் டீசர் ஒன்றை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.


Velaikkaran single track audio released

இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியானது. 'கருத்தவன்லாம் கலீஜாம்... உழைச்சவன்லாம் நம்மாளு...' என உழைப்பாளர்களின் பெருமை பேசும் இந்தப் பாடல் பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் உருவாகி இருக்கிறது.


வெளியானது முதல் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது இந்தப்பாடல். வருகிற செப்டம்பர் 29-ம் தேதி வேலைக்காரன் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Velaikkaran single track audio 'Karuthavanlaam galeejaam' released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil