»   »  ஆன்லைனில் வெளியானது விஜய்யின் பைரவா படப் பாடல்கள்!

ஆன்லைனில் வெளியானது விஜய்யின் பைரவா படப் பாடல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் பைரவா படப் பாடல்கள் விழா எதுவுமின்றி, அறிவிக்கப்பட்ட தினத்துக்கு 2 நாட்கள் முன்பாகவே ஆன்லைனில் வெளியாகிவிட்டது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் அன்று வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.


Vijay's Bairava audio released online

ஆரம்பத்தில் இந்தப் பாடல்களை வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.


ஆனால் விழா எதுவும் நடத்தப்படாது என்று பின்னர் அறிவித்தனர். இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் தரப்பில், "ஜெயலலிதாவை எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகக் கருதுகிறோம். எங்கள் நிறுவனம் தயாரித்த நம் நாடு படத்தில் அவர் நடித்துள்ளார். எனவே இந்தத் துக்கமான தருணத்தில் பாடல் வெளியீட்டு விழா நடத்துவது சரியாக இருக்காது. எங்கள் படத்தின் நாயகன் விஜய்யும் அவ்வாறே கருதினார்," என்று கூறியிருந்தது.


அதன்படி ஆன்லைனில் எளிமையாக இன்று பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

English summary
Vijay's Bairava audio songs was released online today without any event.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil