»   »  'நோ ஆடியோ ஃபங்ஷன்னு விஜய் சொல்லிட்டார்...!- பைரவா தயாரிப்பாளர் பேட்டி

'நோ ஆடியோ ஃபங்ஷன்னு விஜய் சொல்லிட்டார்...!- பைரவா தயாரிப்பாளர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

அவரது மகன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, விஜய் நடிக்கும் பைரவா படத்தை தயாரித்து வருகிறார்.

Vijay says No to Bairava audio release function

கதை, திரைக்கதை, வசனம், எழுதி - பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிஞர் வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோயம்பேடு போன்று பல லட்சம் பொருட்செலவில், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கடைகள், 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகளைக் கொண்டு ஒரு நிஜ பஸ் நிலையத்தையே கண்முன்னே கொண்டு வந்ததுபோல் செட் அமைத்து, அதில் 12 நாட்களுக்கும் மேலாக விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தினர்.

அதே போல் சென்னை பின்னிமில்லில் மிக பிரமாண்டமான பைரவர் கோயில் போன்றதொரு மிகப்பெரிய அரங்கம் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பாடல் காட்சி ஒன்று சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பான முறையில் படுவிமரிசையாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது பைரவா இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி கூறுகையில், "பைரவா இசைவெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.

காரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம்நாடு திரைப்படத்தில் அம்மா அவர்கள் நடித்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அம்மா அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம்.

அதோடு, இளைய தளபதி விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசை வெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.

English summary
Bairava producer says that hero Vijay strictly said No to Bairava audio release function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil