»   »  நீயா நானான்னு பார்த்துடறேன்: 'அந்த' இணையதளத்திற்கு விஷால் சவால்

நீயா நானான்னு பார்த்துடறேன்: 'அந்த' இணையதளத்திற்கு விஷால் சவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு நீயா நானான்னு பார்த்துடறேன் என நடிகர் விஷால் இணையதளம் ஒன்றுக்கு சவால் விட்டுள்ளார்.

அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சிம்பா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எதிரும், புதிருமான விஷாலும், சிம்புவும் கலந்து கொள்வார்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

அய்யய்யோ இசை வெளியீட்டு விழாவில் என்ன கலாட்டா நடக்கப் போகிறதோ என்று பலரும் வியந்தனர்.

விஷால்

விஷால்

இசை வெளியீட்டு விழா அறிவித்தது போன்று நடந்தது. ஆனால் விழாவில் விஷால் கலந்து கொண்டாரே தவிர சிம்பு வரவில்லை. விழாவில் ஜெயம் ரவி, பிரசன்னா, சினேகா, வெங்கட் பிரபு, மிஷ்கின், தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிம்பா

சிம்பா

சிம்பா தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு பிறகே ரிலீஸாகும். அப்போது இந்த படம் எந்த இணையதளத்திலும் வெளியாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு நீயா நானான்னு பார்த்துடறேன். அந்த இணையதளத்தின் பெயரை சொல்லி அவர்களுக்கு பப்ளிசிட்டி கொடுக்க விரும்பவில்லை என்று விழாவில் பேசிய விஷால் தெரிவித்தார்.

தேர்தல்

தேர்தல்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் விஷால்.

ஞானவேல்ராஜா

ஞானவேல்ராஜா

முன்னதாக சி3 படத்தை வெளியிட்டால் தமிழ் ராக்கர்ஸ் நபர்களை எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து சிறையில் தள்ளுவேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சவால்விட்டார். இந்நிலையில் இணையதளத்தின் பெயரை சொல்லாமல் சவால் விட்டுள்ளார் விஷால்.

English summary
Vishal has challenged a website that is known for leaking new movies on the day of its release itself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil