»   »  நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல் அஜீத்தின் விவேகம் பாடல் டீசர் வெளியீடு! #VivegamAudioTeaser

நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல் அஜீத்தின் விவேகம் பாடல் டீசர் வெளியீடு! #VivegamAudioTeaser

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் பாடல் டீசரை புதன்கிழமை நள்ளிரவு திடீரென வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சர்வைவா என்ற அந்த பாடல் டீசர் வெளியான எட்டு மணி நேரத்தில் 4.5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

சர்வைவா...

சர்வைவா...

விவேகம் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் டீசரில் இயக்குநர் சிவா ஒரு சோபாவில் அமர்ந்து ரசிக்க, அனிருத் மைக்கில் சர்வைவா என்ற பாடலை ஹாலிவுட் பாணியில் பாடுகிறார்.

திடீரென

திடீரென

இந்த டீசரை வெளியிடுவது குறித்து எந்த முன் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இசை உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனம் இந்த டீசரை வெளியிட்டுள்ளது.

துள்ளல் பாட்டு

துள்ளல் பாட்டு

முதல் முறை கேட்ட உடனே இளைஞர்களின் மனதில் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு துள்ளல் பாடலாக வந்திருக்கிறது இந்த சர்வைவா. ஜூலை மாதம் பாடல்கள் முழுமையாக வெளியாகும் எனத் தெரிகிறது.

ட்ரெண்டிங்கில்...

சர்வைவா பாடல் டீசர் வெளியான அடுத்த சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது. இன்று காலை ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தில் உள்ளது #VivegamAudioTeaser

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 10

அஜித்தின் 57வது படமான விவேகத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Ajith's Vivegam song teaser has released suddenly on Wednesday midnight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil