பாக்யராஜ் ஆபீஸ் வாசலில் வாய்ப்பு கேட்டு பல நாள் நின்று இருக்கிறேன்.. யோகி பாபு உருக்கம்!

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் ஆபிஸில் பல நாட்கள் வாய்ப்பு கேட்டு நின்றிருந்ததாக நடிகர் யோகி பாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள யோகி பாபு படு பிஸியாக உள்ளார். ரஜினிகாந்த், அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் யோகி பாபு.

கடைசியாக டிக்கிலோனா படம்

கடைசியாக டிக்கிலோனா படம்

அவரது நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முடி திருத்தும் தொழிலாளியாக லீடிங் ரோலில் நடித்திருந்தார் யோகி பாபு. கடைசியாக யோகி பாபு இயக்கத்தில் டிக்கிலோனா படம் வெளியானது.

யோகி பாபு படங்கள்

யோகி பாபு படங்கள்

தற்போது, பீஸ்ட், வலிமை, டாக்டர், அயலான், அரண்மனை 3, சதுரங்க வேட்டை 2, ஜகஜால கில்லாடி, கடைசி விவசாயி, அனபெல்லா விஜய் சேதுபதி, பன்னிக்குட்டி, சலூன், தீயோருக்கு அஞ்சேல், தமிழரசன் உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு.

முறுங்கைக்காய் சிப்ஸ் படம்

முறுங்கைக்காய் சிப்ஸ் படம்

தனது எதார்த்தமான நடிப்பு, உடல் மொழி, டயலாக் டெலிவரி என தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகர் யோகி பாபு. தற்போது சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

வாசலில் நின்று வாய்ப்பு கேட்டு இருக்கிறேன்

வாசலில் நின்று வாய்ப்பு கேட்டு இருக்கிறேன்

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய யோகி பாபு, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி.. 15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாக்யராஜ் ஆபீஸ் வாசலில் வாய்ப்பு கேட்டு பல நாள்கள் நின்று இருக்கிறேன்... சித்து +2 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன்.. ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பேன்..

பழசை மறக்க முடியுமா?

பழசை மறக்க முடியுமா?

நான் இப்போ பிஸியாக இருக்கேன். அதுக்காக எனக்கு வாய்ப்பு கொடுத்த அவரை மறக்க முடியுமா..? பார்க்காமல் போனா அது தப்பு இல்லையா... அதான் நான் இங்கு வந்தேன்.. நான் மிகவும் ரசிக்கும் இயக்குனர் அவர்.. அவருடைய பையன் படம் நடிக்கும் போது எனது பக்கத்திலிருந்து ஒரு சிறிய சப்போர்ட்டாக இந்த படத்தை நான் செய்தேன்..

மீண்டும் மீண்டும் நடிப்பேன்

மீண்டும் மீண்டும் நடிப்பேன்

சாந்தணு இன்னும் எத்தனை படங்கள் நீங்க பண்ணாலும் நான் மீண்டும் மீண்டும் உங்களுடன் நடிப்பேன்.. இவ்வாறு நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X