»   »  ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் யுவன்!

ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் யுவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என இந்திய திரையுலகில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, அடுத்து ஹாலிவுட் போகிறார்.

வூல்ஃபெல் ('Woolfell') என்ற ஹாலிவுட் படத்துக்கு அவர் இசையமைக்கிறார்.

எம்.ஆர்.ராதாவின் பேரன் பிரபாகரன் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேஷன் திரைப்படம் இது. இதன் முதல் பார்வை போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

Yuvan's Hollywood entry through Woolfell

படத்துக்கு கேஎல் ப்ரவீண் எடிட்டிங் செய்கிறார். ஒலி வடிவமைப்பாளர் குணால் ராஜனும் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் பிரபாகரன் கூறுகையில், "Woolfell' திரைப்படம் ரோபோக்கள் கதாபாத்திரங்களாகத் தோன்றும் ஒரு அனிமேஷன் திரைப்படம். அரசியல் சார்ந்த கதைக்களமாக இப்படம் இருக்கும்.

இப்படத்தின் டீஸருக்கு யுவன் இசையமைத்துக் கொடுத்துவிட்டார். விரைவில் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், யுவன் பின்னணி இசையமைக்க இருக்கிறார்," என்றார்.

'Woolfell' படத்தை ஹரிகேன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2016ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

English summary
Ace music director Yuvanshankar Raja is entering into the international arena through Hollywood animation movie 'Woolfell'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil