»   »  நீ... காதலர் தினத்தில் மீண்டும் புது வீச்சில் களம் இறங்கிய யுவன்!

நீ... காதலர் தினத்தில் மீண்டும் புது வீச்சில் களம் இறங்கிய யுவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யாக்கை படத்திலிருந்து யுவனின் குரலில் வெளியாகியிருக்கும் 'நீ' வழக்கம் போல யுவனின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.

கிருஷ்ணா, சுவாதி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் யாக்கை. குழந்தை வேலப்பன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நீ என்று தொடங்கும் ஒற்றைப் பாடலை யுவன் நேற்று வெளியிட்டார். காதல் பாடலாக உருவாகி இருக்கும் நீ சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

ரசிகர்கள் பலரும் யுவனின் குரலுக்கு ஈடு இணையில்லை, நான் இந்தப் பாடலுக்கு அடிமையாக மாறிவிட்டேன் என்று தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

யாக்கை

யுவன் நேற்று வெளியிட்ட 'நீ' என்று தொடங்கும் ஒற்றைப்பாடல் தற்போது எக்கச்சக்க பாராட்டுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. "இந்த இதயம் ஒரு ஊஞ்சலடி அது உன் திசையில் இன்று ஆடுதடி" என்று பாடலின் ஒவ்வொரு வரியுமே காதலர்களுக்காக உருவானது போல அவ்வளவு ஸ்பெஷல்.

மீண்டும் யுவன்

மீண்டும் யுவன்

நீயாக பாடலின் மூலம் இந்தக் காதலர் தினத்தில் யுவன் மீண்டு வந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் பீச், பார்க் என்று எந்த இடத்தில் கேட்டாலும் பாடல் வரிகள் முக்கியமாக யுவனின் குரல் தங்களைக் கட்டிப் போடுவதாக பலரும் உருகுவதைக் காண முடிகிறது.

எத்தனை முறை

"காலையில் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன் எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை" என்று பாராட்டி இருக்கிறார் பாரதி பாலா.

யுவன் மீண்டும்

"நீ பாடலின் மூலம் யுவன் மீண்டும் களமிறங்கி விட்டார்" என்று பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அஜீத்.

இசையின் இளையராஜா

"இசையின் இலக்கணம் இளையராஜா , யுவன் இசையின் இளையராஜா" என்று பாராட்டி இருக்கிறார் கலீல் ரகுமான்.

இதே போல ஏராளமான ரசிகர்கள் யுவனின் குரலை பாடலை வரிவரியாக கேட்டு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 2016 ம் ஆண்டு யுவனுக்கு வெற்றிகரமாக அமைந்து, மீண்டும் தலைசிறந்த பாடல்களை அவர் தர வேண்டும் என்று அவரது ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்!

English summary
Yuvan's Single Track 'Neee' Released Yesterday. Now Yuvan Fans Celebrated this song in All Social Media's.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil