Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
"எண்ணம் போல் வாழ்க்கை" ஆல்பம் பாடல்... ஒன்று கூடிய திரையுலகினர்!
சென்னை : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பரவிய கொரோனா நோய் தொற்று பரவல் இப்பொழுது கணிசமாக குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
எங்கு சென்றாலும் கொரோனா அச்சுறுத்திக் கொண்டு இருக்க அனைத்து விதமான தொழில்களும் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பாக திரைத்துறை எந்த படப்பிடிப்பையும் நடத்த முடியாமல் கடந்த இரண்டு வருடங்களாக திணறி வந்தது.
இந்த நிலையில் அரசின் துணையுடன் மக்களின் ஆதரவுடன் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் நடிகர் நடிகைகள் என திரையுலகினர் பலரும் ஒன்றுகூடி "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளனர்.
எங்க
இருந்து
வந்துச்சுன்னே
தெரியல
இந்த
கொரோனா..
பாதிக்கப்பட்ட
ஷெரின்..
கவலையில்
கலங்கும்
ரசிகர்கள்!

கொரோனா
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று ஒரு சில மாதங்களிலேயே அதிவேகமாக பரவி மக்களை தாக்கி வந்தது. பின் ஒருசில மாதத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு வேலைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி முதல் அலையை விடவும் இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக மக்களை படும் அவலத்திற்கு ஆளாக்கியது. எதிர்பார்க்காத பல உயிர்களையும் ஏற்படுத்தியுள்ளது . முதல் அலையில் பெரிதாக உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விடவும் பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியது. இதில் பிரபலமான பல திரைப்பிரபலங்கள் நோய்க்கு பலியாகி அனைவரையும் சோகத்தில் உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மூலமும் மக்களின் ஒத்துழைப்புடனும் கொரோனா இப்பொழுது கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்க அனைத்து வேலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டு பழையபடி அனைவரும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்துள்ளனர்.

எண்ணம் போல் வாழ்க்கை
குறிப்பாக கொரோனா பரவலால் படப்பிடிப்பு முற்றிலும் முடக்கப்பட்டது எந்த ஒரு படப்பிடிப்பு பணிகள் மற்றும் சினிமா பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் சிறிய நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் நடிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் பாதிக்கப்பட்டனர். ஒரு வழியாக வைரஸ் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டு இப்பொழுது படப்பிடிப்புகள் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற ஆல்பம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் கவிதா எழுத்தி,இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசை அமைத்துள்ளார். பிரித்வி மற்றும் எட்வின் பாடலை பாடி உள்ளனர், . யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் இப்பாடலை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

U1 ரெக்கார்ட்ஸ்
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் கவிதாவின் இந்த அசாதாரணமான முயற்சிக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஒத்துழைப்பு கொடுத்து பாடலை உருவாக்கியுள்ளனர். நடிகர்கள் ஆர்யா, சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், அதுல்யா ரவி, சூரி,மாஸ்டர் மகேந்திரன், ஜிவி பிரகாஷ்,ஜனனி,அசோக் செல்வன் அம்மு அபிராமி,மகத்,ஷெரின், கிருஷ்ணா, குக் வித் கோமாளி அஸ்வின், விஜய் டிவி புகழ், பிக்பாஸ் ரைசா வில்சன் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் இப்பாடலுக்கு வாயசைத்து உள்ளனர். குறிப்பாக இந்தப் பாடலில் வரும் அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களது வீடுகளிலிருந்தே வீடியோ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அனைவரும் மீண்டும் வந்திருப்பதையும், கொரோனா பரவலின் போது நாம் எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டோம் உணவு, இருப்பிடம் என அன்றாடத் தேவைகளுக்கே அல்லாடும் நிலைமைக்கு அனைவரும் தள்ளப்பட்டது என அனைத்து வழிகளையும் எண்ணம் போல் வாழ்க்கை பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் கவிதா. மேலும் அனைத்து பிரபலங்களும் எண்ணம் போல் வாழ்க்கை பாடலுக்கு ஒன்றுகூடியதை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்க ரசிகர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
அதில் குறிப்பாக குக் வித் கோமாளி அஸ்வினின் தீவிர ரசிகை ஒருவர் " அஸ்வின் தம்பி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.. அஸ்வின் தம்பி வெள்ளித்திரையில் இன்னும் பல வெற்றிகளை பெற எங்கள் ராக் ஃபேமிலி சார்பாக வாழ்த்துக்கள் என மானஅன்புடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபலமான சில சீரியல்களில் ஹீரோவாக நடித்து பின் திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் எப்படியாவது தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருந்த அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இப்பொழுது தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருக்க அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.