twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆர் விழா... மூத்த நடிகைகள் பங்கேற்பு!

    By Shankar
    |

    எம்ஜிஆரின் கலையுலக பவள விழா சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் அவருடன் பணியாற்றிய மூத்த நடிகைகள் பங்கேற்று விருதுகள் பெற்றனர்.

    எம்.ஜி.ஆரின் 94-வது பிறந்த நாள் விழாவையும் அவரது கலையுலக பவள விழாவையும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ரசிகர்கள் கொண்டாடினர்.

    அண்ணா சாலை நெடுக எம்.ஜி.ஆர். கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இவ்விழாவில் கூடினர்.

    எம்.ஜி.ஆர் கட்அவுட்களுக்கு அவர்கள் மாலைகள் அணிவித்தனர். தீபாராதனை காட்டினர். அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூடி எம்ஜிஆரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

    அரங்கில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் அபூர்வ படங்கள் அடங்கிய கண்காட்சி அனைவரையும் ஈர்த்தது. விழா மேடையில் பாலு அன்ட் பாலு இசைக்குழுவினர் எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களை பாடினர்.

    சிறப்பு விருந்தினர்களாக, எம்ஜிஆருடன் நடித்த ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா, எம்.பானுமதி, எஸ்.எம். பானுமதி, திருடாதே லட்சுமி, கவிஞர் கண்ணதாசன் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், எம்.ஜி. சக்கரபாணி பேரன் எம்.ஜி.சி.பிரதீப், பி.எஸ். ராஜு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், புதுவை, மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.

    English summary
    MGR's 94 birthday and platinum jubilee of his film career has been celebrated by his hard core fans in Chennai recently. Veteran actresses who worked with the late legenend have attended the event and remembered MGR's golden days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X