twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல மலையாள இயக்குனர் மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By Shankar
    |

    நிலமோசடி புகாரில் பிரபல மலையாள இயக்குநர் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த அனு ராதாரவி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ''போரூரில் எனக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதை மலையாள பட இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மூலம் ஏ.கே.மணி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நில மோசடி பற்றி 26-7-10 அன்று புறநகர் கமிஷனரிடம் புகார் அளித்தேன். அந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை.

    எனவே எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க புறநகர் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி அக்பர்அலி, அனு ராதாரவியின் நில மோசடி புகாரில் உண்மை இருந்தால் மலையாள இயக்குனர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று புறநகர் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    The Madras High Court ordered to file a case on popular Malayalam film director K S Gopalakrishnan for involved in land cheating. Mrs Anuradha of Chennai Valasaravakkam filed the petition against the film director today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X