»   »  இந்த புகழ் மைனாவால் கிடைத்தது!- தம்பி ராமையா

இந்த புகழ் மைனாவால் கிடைத்தது!- தம்பி ராமையா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Thambi Ramayya, Vidhaarth and Amala Paul
நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் நடித்திருந்தாலும் என்னை பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. மைனாவில் நடித்த பிறகுதான் நான் பிரபலம் ஆனேன், என்கிறார் தம்பி ராமையா.

மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. ஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும்.

ஆனால் மைனாவில் நடித்த பிறகு படத்தின் ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்டார் தம்பி ராமையா. படத்தைப் பார்த்த ரஜினியே, தம்பி ராமையாவை பெரிதும் பாராட்டியிருந்தார்.

சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னை பற்றி பேச வைத்தது 'மைனா' படம்தான் என நகைசுவை நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கூறினார்.

தம்பி ராமையா, இயக்குனர் தருண் கோபி ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று நடைபெற்ற மகா யாகத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

யாகாத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுவரை 50 க்கும் மேற்பட்ட சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் தம்பி பிரபு சாலமன்வின் மைனா படத்தில் நடித்ததுதான் என்னை சினிமா உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டது.

இந்த படத்திற்கு பின் அதிகளவு ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலமும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவிக்கின்றர் ரசிகர்கள். இப்போது கழுகு, கள்ள சிரிப்பழகா, வாகை சூடவா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்து வரும் பேச்சியக்கா மருமகன் என்ற படத்திலும் நடிக்கிறேன்," என்றார்.

English summary
Thambi Ramayya, the director turned actor says that because of Mainaa only he got this much of fame in cinema.
Please Wait while comments are loading...