twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் விநியோகத்தில் முறைகேடு... சக்சேனாவுக்கு எதிராக மேலும் புகார்!

    By Shankar
    |

    Rajinikanth and Aishwarya Rai
    சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட எந்திரன் படத்தின் விநியோகத்தில் பெரும் மோசடி நடந்துவிட்டதாகக் கூறி, சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மீதும், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் போலீசில் புகார் தர தியேட்டர்காரர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதிமுக அரசு பதவி ஏற்ற கையோடு, திமுக சார்புடைய பலருக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக சன் டிவி, சன் பிக்சர்ஸ் மற்றும் அவற்றின் நிர்வாகிகளை நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. இதற்கு திரைப்படத் துறையில் சன் குழுமத்தால் பாதிக்கப்பட்ட சிலரே காரணமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

    தீராத விளையாட்டுப் பிள்ளை விநியோகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க திரையுலகப் பிரமுகர்கள் சிலரே வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

    விஜய் நடித்த காவலன் பட விநியோகம் தொடர்பான புகார், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட புகார் போன்றவற்றையும் சக்சேனாவின் இப்போதைய வழக்குடன் சேர்க்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

    இன்னொரு பக்கம் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் பட விநியோகத்தில் மோசடி செய்ததாக சக்சேனாவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Sources strongly claimed that a faction of film exhibitors have decided to give a cheating complaint on Sun Pictures COO Hansraj Saxena in the distribution of Rajini starrer Enthiran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X