»   »  விஜயகுமாரை பதவியிலிருந்து நீக்கச் சொல்வதா? - வனிதாவுக்கு நடிகர் சங்கம் கண்டிப்பு

விஜயகுமாரை பதவியிலிருந்து நீக்கச் சொல்வதா? - வனிதாவுக்கு நடிகர் சங்கம் கண்டிப்பு

By Chakra
Subscribe to Oneindia Tamil
Vanitha
சென்னை: நடிகர் சங்கத்தின் உப தலைவர் பதவியிருந்து விஜயகுமாரை நீக்கச் சொல்லும் உரிமை வனிதாவுக்கு இல்லை என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சமீபகாலமாக எங்கள் சங்கத்தின் உப தலைவரும் மூத்த கலைஞருமான விஜயகுமாரையும், அவரது துணைவியாரும் சங்கத்தின் உறுப்பினருமான மஞ்சுளாவையும் பற்றி அவர்களின் மகள் வனிதா விஜயகுமார் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பேட்டி அளித்து வருவது நாடே அறிந்த ஒன்று.

ஒரு குடும்பத்தின் பிரச்சினை என்பதால் நடிகர் சங்கம் இந்த கசப்பான நிகழ்ச்சிகளை மனவேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தது.

தற்போது வனிதா அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் சங்கத்தின் உபதலைவர் பதவியில் இருந்து விஜயகுமாரை நீக்க வேண்டும் என கூறி இருக்கிறார். இது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கவுரவத்தை பாதிக்கும் விஷயம்.

விஜயகுமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 4 மொழிகளிலும் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தன் நடிப்புக்காக அரசு விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்றவர். எங்கள் நடிகர் சங்கத்தில் 2009 முதல் 2012-ம் ஆண்டுக்கான நடைபெற்ற தேர்தலில் உபதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சொல் வதற்கான உரிமை நடிகர் சங்கத்தின் உறுப்பினராக அல்லாத வனிதாவுக்கு இல்லை.

மேலும் அவர் பாரம்பரியமிக்க நடிகர் சங்கத்துக்கு அறிவுரை சொல்ல அவசியம் இல்லை.

ஒரு கலை குடும்பத்தை சார்ந்த நீங்கள் பிரச்சினைகளை பேசி தீர்த்து இருக்கலாம். ஊடகங்கள் மூலம் உரையாடுவது கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு கல்வீசுவது போன்றதாகும்.

எங்கள் கலைக் குடும்பத்தினர் குடும்பங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தின் விருப்பம் லட்சியம் ஆகும்..."

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Nadigar Sangam asks Vanitha to mind her own business and no need for her advice to Nadigar Sangam in Vijayakumar issue. Recently Vanitha urged the Nadigar Sangam to sack his father Vijayakumar from the post of Sangam"s vice president. In a recent statement issued by its President Sarathkumar, General Secretary Radha Ravi and Treasurer Vaagai Chandrasekar, they advised Vanitha to settle their issue with in their limit and dont drag the name of prestigious Sangam.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more