»   »  ஒரே நாளில் 1 லட்சம் பேர் பார்த்த 'துப்பறிவாளன்': தியேட்டரில் அல்ல

ஒரே நாளில் 1 லட்சம் பேர் பார்த்த 'துப்பறிவாளன்': தியேட்டரில் அல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துப்பறிவாளன் படத்தை ரிலீஸான அன்று மட்டும் 1 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்துள்ளனர்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று ரிலீஸானது. படம் ரிலீஸாவதற்கு முன்பு விஷால் அன்ட் கோ முயற்சியால் தமிழ் கன் இணையதளத்தின் அட்மின் எனப்படும் கவுரி சங்கரை போலீசார் கைது செய்தனர்.

புதுப்படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது தமிழ் கன்.

துப்பறிவாளன்

துப்பறிவாளன்

கைதானது எங்கள் அட்மின் இல்லை, துப்பறிவாளன் ரிலீஸான உடன் நாங்கள் வெளியிடுகிறோம் என்று தமிழ் கன் சவால் விட்டது. இந்நிலையில் படம் ரிலீஸான ஒரு மணிநேரத்திற்குள் தமிழ் கன், தமிழ் ராக்கர்ஸ் உள்பட பல இணையதளங்களில் துப்பறிவாளன் வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தமிழ் கன், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் தியேட்டர் பிரிண்ட் அல்ல ஹெச்டி பிரிண்ட்டில் துப்பறிவாளன் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் குஷியாகிவிட்டனர்.

1 லட்சம்

1 லட்சம்

துப்பறிவாளன் ரிலீஸான அன்று மட்டும் 1 லட்சம் பேர் இணையதளங்கள் மூலம் அந்த படத்தை பார்த்துள்ளனர். முதல் நாளே ஹெச்டி பிரிண்ட் கிடைத்த சந்தோஷம் வேறு பலருக்கு.

பாவம்

பாவம்

துப்பறிவாளன் படம் இப்படி இணையதளங்களில் ஹெச்டி பிரிண்ட்டில் வெளியானதால் படக்குழுவுக்கு தான் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that 1 lakh people have watched Vishal starrer Thupparivalan on the day of its release in some websites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil