»   »  10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை... 'நாங்க ஏன் பொய் சொல்லப் போறோம்?'- பட நிறுவனம் விளக்கம்!

10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை... 'நாங்க ஏன் பொய் சொல்லப் போறோம்?'- பட நிறுவனம் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

10 எண்றதுக்குள்ள படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் அந்தப் படத்துக்கான வசூல் குறித்து வெளியான தகவல்கள் பொய் என்று சிலர் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படம் ரூ 6.50 கோடியை இந்தியா முழுவதும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 Endrathukkulla BO reports: Producers clarification

ஆனால் அவ்வளவு வசூலிக்கவில்லை... வெறும் 2.92 கோடிதான் என்று சிலர் ட்விட்டரில் வெளியிட்ட தகவலை நடிகர் தனுஷ் மீண்டும் ட்வீட் செய்திருந்தார். இது பரபரப்பைக் கிளப்பியது. 10 எண்றதுக்குள்ள படத்துக்குப் போட்டியாக தனுஷின் நானும் ரவுடிதான் படம் வெளியாகியுள்ள நிலையில், தனுஷ் இப்படி ட்விட்டியது உற்றுக் கவனிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் 10 எண்றதுக்குள்ள பட தயாரிப்பாளர்கள் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், "10 எண்றதுக்குள்ள தயாரிப்பாளர்களின் நம்பகத்தன்மை பற்றி திரையுலகம் அறியும். படத்தின் வசூல் குறித்து பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடு முழுவதும் 650 அரங்குகளில், அதுவும் நல்ல அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.

மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. அப்படியென்றால் படத்தின் வசூல் குறித்து நீங்களே புரிந்து கொள்வீர்கள்," என்று தெரிவித்துள்ளனர்.

English summary
The producers of 10 Endrathukkulla clarified that the movie got a huge opening on its first day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil