»   »  விக்ரமின் 10 எண்றதுக்குள்ள ... யூ!

விக்ரமின் 10 எண்றதுக்குள்ள ... யூ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமின் 10 எண்றதுக்குள்ள படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழுவினர் குடும்பத்தினருடன் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் யூ சான்றிதழை அளித்துள்ளனர்.

விக்ரம், சமந்தா, பசுபதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 10 எண்றதுக்குள்ள. கோலி சோடா படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் விஜய் மில்டன் தனது 2 வது படமாக இதனை இயக்கியிருக்கிறார்.


நெடுஞ்சாலைகள் குறித்து தமிழில் வந்த ஒருசில படங்களில் 10 எண்றதுக்குள்ள படம் குறிப்பிடத் தகுந்த படமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.


சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரை இதுவரை சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பேர் கண்டுகளித்திருக்கின்றனர் இதனால் உற்சாகம் அடைந்த படக்குழுவினர் தற்போது யூ சான்றிதழும் கிடைத்திருப்பதில் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.படம் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் அக்டோபர் 21ம் தேதி உலகமெங்கும் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்ததும் நாயகி சமந்தா உற்சாகத்தில் திளைத்து வருகிறார் போலும் ஏ என்று ட்விட்டரிலேயே உற்சாகமாகக் கத்தியிருக்கு பொண்ணு....


English summary
Vikram's 10 Endrathukulla Movie Gets Clean U Certificate by The Censor Board. Release Planned for October 21, Movie Running Time 2 hrs 24 mins.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil