»   »  விக்ரமின் 10 என்றதுக்குள்ள ரசிகர்களைக் கவர்ந்ததா?

விக்ரமின் 10 என்றதுக்குள்ள ரசிகர்களைக் கவர்ந்ததா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ படத்திற்குப் பின் 9 மாதங்கள் கழித்து விக்ரமின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் 10 என்றதுக்குள்ள. கோலி சோடா படத்தைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கிறார்.

முதல்முறையாக சமந்தா விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் பசுபதி, ராகுல் தேவ், அபிமன்யு சிங், மனோபாலா, ராம்தாஸ் மற்றும் சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


தமிழில் சாலைகளைக் குறித்த படங்கள் வெகு குறைவாகவே வெளிவந்திருகின்றன. அந்தக் குறையை தீர்க்கும் பொருட்டு விஜய் மில்டன் இந்தப் படம் முழுவதையும் சாலைகளிலேயே எடுத்திருக்கிறார்.


ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் விக்ரமின் 10 என்றதுக்குள்ள ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை ரசிகர்களின் கருத்துக்களில் இருந்து பார்க்கலாம்.


ஆரம்பமே

"விக்ரமின் 10 என்றதுக்குள்ள ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது" என்று பிரசாந்த் என்னும் ரசிகர் தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.


வழக்கமான விக்ரம் படமல்ல

"10 என்றதுக்குள்ள படம் முழுவதுமே கமர்ஷியல் ரீதியாக அமைந்திருக்கிறது, ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்று சொல்லலாம். முதல் பாதி வழக்கமான கதை என்றாலும், இரண்டாவது பாதி விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. 10 என்றதுக்குள்ள வழக்கமான விக்ரம் படமல்ல" கிராம்ஷி.


பொழுதுபோக்கு

"10 என்றதுக்குள்ள நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் கடைசி 30 நிமிடங்கள் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறது. சமந்தா மற்றும் விக்ரமின் நடிப்பு நன்றாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார் வினோத்.


முதல் பாதி

"விக்ரமின் 10 என்றதுக்குள்ள முதல் பாதி சுமாராக இருந்தாலும், 2 வது பாதி வித்தியாசமாக இருக்கிறது" என்று கெளதம் கூறியிருக்கிறார்.


முழுமையான

"10 என்றதுக்குள்ள ஒரே வரியில் சொல்வதென்றால் முழுமையான எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த, ஒரு பொழுதுபோக்கு படம்" என்று கலையரசன் தீர்ப்பு கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் 10 என்றதுக்குள்ள முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம் என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.English summary
Vikram, Samantha starrer 10 Endrathukulla is a Road Side Movie Written and directed by Vijay Milton - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil