»   »  சகலமானவர்களுக்கும் முருகதாஸ் சொல்வது என்னன்னா... 10 எண்றதுக்குள்ள டீசர் இன்று வெளியீடு!

சகலமானவர்களுக்கும் முருகதாஸ் சொல்வது என்னன்னா... 10 எண்றதுக்குள்ள டீசர் இன்று வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் - சமந்தா இணைந்து நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது ராஜஸ்தானில் படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

படம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்கனவே சந்தித்திருப்பதால் படத்தை விரைந்து முடித்து, விரைவில் வெளியிட படப்பிடிப்புக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். ஐ திரைப்படத்திற்குப் பின் விக்ரமின் நடிப்பில் வெளிவரும் படம் 10 எண்றதுக்குள்ள என்பதால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

முதல்முறையாக விக்ரம்- சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்தைப் பற்றி இங்கே காணலாம்.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

கோலி சோடா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் விஜய் மில்டன் தனது அடுத்த படமாக 10 எண்றதுக்குள்ள படத்தை கடந்த 2014ம் வருடம் மே மாதத்தில் தொடங்கினார். விக்ரம்,சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப்(ஹிந்தி), மனோபாலா மற்றும் அபிமன்யு சிங்(ஹிந்தி) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஆக்க்ஷன் கலந்த அதிரடி

ஆக்க்ஷன் கலந்த அதிரடி

10 எண்றதுக்குள்ள ஆக்க்ஷன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. சாலைகளைப் பற்றிய இந்தப் படத்தில் விக்ரம் ட்ரக் டிரைவராக நடித்திருக்கிறார், படத்தின் கதையானது தென்னிந்தியாவில் தொடங்கி வட இந்தியாவில் முடிவடைவது போன்று எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரு வருடத்திற்கும் மேலாக

ஒரு வருடத்திற்கும் மேலாக

போன வருடத்தில் தொடங்கிய படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை, படத்தின் முழுக் காட்சிகளையும் எடுத்து விட்டு தற்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக படக்குழு ராஜஸ்தான் சென்றிருக்கின்றது. ஆகஸ்ட் 21 தொடங்கி 31 வரை இந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஓடுகின்ற ட்ரெயினில் படமாக்கப் படவிருக்கிறது.

தள்ளிப்போன வெளியீடு

தள்ளிப்போன வெளியீடு

முதலில் அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முழுமை அடையாததால் தற்போது அக்டோபர் 21 ம் தேதி தள்ளிப் போயிருக்கிறது படத்தின் வெளியீட்டுத் தேதி.

சோனி மியூசிக்

10 எண்றதுக்குள்ள படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியிருக்கிறது இமான் இசையமைப்பில் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. சோனி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இன்று படத்தின் டீசர் வெளியாகிறது என்று அறிவித்து இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் இன்று படத்தின் டீசர் வெளியாகிறது, என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்.

ஜவ்வு மிட்டாயா இழுத்துட்டு இருந்த படம் ஒருவழியா முடிஞ்சிருச்சு போல....

English summary
Vikram-Samantha's '10 Endrathukulla' Movie Teaser Released Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil