»   »  எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே... விக்ரமைப் பாராட்டி மகிழ்ந்த முருகதாஸ்

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே... விக்ரமைப் பாராட்டி மகிழ்ந்த முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 என்றதுக்குள்ள படம் நன்றாக வந்திருப்பதற்கு விக்ரமின் அர்ப்பணிப்பு உணர்வும் கடின உழைப்புமே காரணம் என்று, படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார்.

10 என்றதுக்குள்ள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் முருகதாஸ் "10 என்றதுக்குள்ள ஆக்க்ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியிருக்கிறது இது நிச்சயம் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்.


10 Enradhukulla all praise for Vikram's dedication - says A R Murugadoss

நான் இந்தப் படத்தை பலமுறை பார்த்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் படம் எனக்கு விறுவிறுப்பை அளிக்கத் தவறவில்லை. குறிப்பாக விக்ரம் சாரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும்.


மேலும் ஏ,பி,சி என எல்லாத் தரப்பு ரசிகர்களையும் படம் கவரும், இயக்குநர் விஜய் மில்டன் படத்தை இயக்கியதுடன் ஒளிப்பதிவாளராகவும் மாறி உழைத்திருக்கிறார்.


விக்ரம் சார் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை விக்ரம் என்றவுடன் அவரின் கடின உழைப்பே எல்லோருக்கும் நினைவில் வரும். மற்ற நடிகர்கள் ஏன் என்னால் கூட சினிமாவை இந்த அளவிற்கு நேசிக்க முடியுமா? என்று தெரியவில்லை.'


10 Enradhukulla all praise for Vikram's dedication - says A R Murugadoss

பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநர் அம்மா ஸ்தானம் வகிப்பார், ஆனால் விக்ரமின் படத்திற்கு அவரும் ஒரு அம்மாவாக மாறிவிடுவார். ஒரு பாடம் ஆரம்பிப்பது முதல் அதனை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது வரை அவரும் டென்ஷனாகவே காணப்படுவார்.


என்று விக்ரமின் உழைப்பை புகழ்ந்து பேசினார் முருகதாஸ், தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்த சமந்தா அவரின் திறமையான நடிப்பை படத்தில் கொடுத்திருக்கிறார்.மேலும் இந்தப் படத்தில் வேலை செய்த டெக்னிஷியன்கள் அனைவருமே தங்கள் அதிகபட்ச உழைப்பை படத்தில் கொட்டியிருக்கின்றனர்,அவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மீண்டும் படத்தின் வெற்றிவிழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று கூறி அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.


விக்ரம் - சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் 10 என்றதுக்குள்ள திரைப்படம் ஆயுத பூஜை விருந்தாக திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
10 Enradhukulla Movie Press Meet Producer A R Murugadoss says "has all praise for Vikram's dedication and Hard Work". The Movie hit to Screens on 21st October.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil