twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த படங்களை பார்த்தால் போலீஸ்காரர்கள் மீது மதிப்பு வரும்!

    By Siva
    |

    சென்னை: போலீஸ்காரர்களுக்கு கௌரவம் சேர்த்த 10 படங்களை பற்றி பார்க்கலாம்.

    சினிமா துறையால் தான் மக்கள் மனதில் போலீசார் பற்றிய தவறான கருத்து ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சினிமா துறையினர் இனியாவது தங்களின் போக்கை மாற்றி போலீசாரை நல்லவிதமாக படத்தில் காண்பிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் போலீஸாருக்கு பெருமையும், கௌரவமும் தேடித் தரும் வகையில் வெளிவந்த சில படங்களை பார்ப்போம்,

    தங்கப் பதக்கம்

    தங்கப் பதக்கம்

    1974ம் ஆண்டில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான படம் தங்கப்பதக்கம். அந்த படத்தில் சிவாஜி வழிமாறி சென்று தவறுகள் செய்தது தன் மகன் என்றும் பாராமல் அவரை சுட்டுக் கொன்று கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார். அந்த படத்தை பார்க்கையில் போலீசார் கடமை தவறாதவர்கள் என்று அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டது.

    மூன்று முகம்

    மூன்று முகம்

    மூன்று முகம் படத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இன்றும் நிலைத்து நிற்பவர் அலெக்ஸ் பாண்டியன். அந்த கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியிருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    ஜெய்ஹிந்த்

    ஜெய்ஹிந்த்

    ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜுன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். நாட்டுக்கு துரோகம் செய்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரை சும்மாவிடாமல் நடவடிக்கை எடுப்பார்.

    சேதுபதி ஐபிஎஸ்

    சேதுபதி ஐபிஎஸ்

    விஜய்காந்த் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த படம் சேதுபதி ஐ.பி.எஸ். படத்தில் அவரது குடும்பத்தாரும் நாட்டுக்கு சேவை செய்து ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள்.

    வால்டர் வெற்றிவேல்

    வால்டர் வெற்றிவேல்

    பெண்களை வைத்து ஆபாச படம் எடுக்கும் கும்பலில் தனது தம்பியும் ஒருவன் என்று நேர்மையான போலீஸ் அதிகாரியான வால்டர் வெற்றிவேலுக்கு(சத்யராஜ்) தெரிய வரும். அவர் தனது தம்பி என்றும் பாராமல் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்.

    சாமி

    சாமி

    நேர்மையாக இருந்தால் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல் அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை அடக்கும் சூப்பர் போலீஸாக விக்ரம் நடித்த படம் சாமி.

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    இளம்பெண்களை சீரழித்து அவர்களை கொடூரமாக கொலை செய்யும் இரண்டு சைக்கோ மருத்துவக் கல்லூரி மாணவர்களை தேடிப் பிடித்து அவர்களை அழிக்கும் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த படம் வேட்டையாடு விளையாடு.

    காக்க காக்க

    காக்க காக்க

    அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரமாகவே சூர்யா மாறிய படம் காக்க காக்க. படத்தில் வரும் போலீஸ் அதிகாரி சூர்யாவை பார்த்தாலே கம்பீரமாக இருக்கும். குற்றவாளிகளை துரத்தி துரத்தி வேட்டையாடும் அசத்தல் போலீசாக நடித்திருந்தார் சூர்யா.

    சிங்கம்

    சிங்கம்

    சாதாரண கிராமத்தில் எஸ்.ஐ. ஆக இருந்த சூர்யா சென்னை வந்து சிறுவர்களை கடத்தியும், கட்டிடம் கட்டுபவர்களை மிரட்டியும் பணம் பறிக்கும் பெரிய தாதாவை அழித்து நகரை சுத்தமாக்கும் சூப்பர் போலீசாக நடித்த படம் சிங்கம். சிங்கம் 2 படத்திலும் அவரின் வேட்டை தொடர்ந்திருக்கும்.

    சிறுத்தை

    சிறுத்தை

    கார்த்தி ஆந்திராவில் அட்டூழியம் செய்த ரவுடிகளை அடக்கி ஒடுக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்த படம் சிறுத்தை. ரத்னவேல் பாண்டியனாக நடித்த அவரை படத்தில் பார்த்தாலே மரியாதை ஏற்படும் அளவுக்கு நடித்திருந்தார்.

    English summary
    Above is the list of ten movies that show police officers in good light. PM Modi accused cine industry of damaging the image of police department.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X