»   »  ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 10 தேசிய விருது வாங்குனவங்க சேரும் இந்தி திரிஷ்யம்!

ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 10 தேசிய விருது வாங்குனவங்க சேரும் இந்தி திரிஷ்யம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தேசிய விருது வாங்கிய பத்து பேர் ஒரே படத்தில் இணையும் திரிஷ்யம் படத்திற்கான எதிர்பார்ப்பு பாலிவுட்டில் அதிகமாக உள்ளது.

மலையாள நடிகர் மோகன்லாலும் காந்தக் கண்ணழகி மீனாவும் இணைந்து நடித்த திரிஷ்யம் படம் த்ரில்லேர் வகையைச் சேர்ந்தது.இப்படம் கேரளாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

படத்தின் வெற்றியானது தெலுங்கு, தமிழ் என் இப்படத்தை ரீமேக்க வைத்ததது,இப்போது இந்தியிலும் இப்படத்தை ரீமேக்க இருக்கிறார்கள்

நாயகன் அஜய் :

நாயகன் அஜய் :

இந்தி திரை உலகின் வசூல் மன்னன் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். சக்ம், தி லெஜென்ட் ஆப் பகத் சிங் படத்திற்காக இருமுறை தேசிய விருது பெற்று இருக்கிறார்.இப்படத்திற்க்காக உடல் எடையைக் குறைத்து இருக்கிறார்.

நாயகி தபு :

நாயகி தபு :

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , சினேகிதி படங்களில் போன்ற தமிழ் படங்களில் நடித்த தபு தான் படத்தின் நாயகி சந்தினி பார் , மாச்சிஸ் படங்களில் நடித்தற்காக இருமுறை தேசிய விருது பெற்றவர்

திரிஷ்யத்தில் ஸ்ரேயா:

திரிஷ்யத்தில் ஸ்ரேயா:

கந்தசாமி , சிவாஜி படங்களின் நாயகி ஸ்ரேயா இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தில் என்ன வேடம் என்பது தெரியவில்லை.

இயக்குனர் முதல் தயாரிப்பாளர் வரை தேசிய விருது தான் :

இயக்குனர் முதல் தயாரிப்பாளர் வரை தேசிய விருது தான் :

இயக்குனர் நிஷிகாந்த் காமேஷ் , இசை அமைப்பாளர் விஷால் பரத்வாஜ் , சிறந்த வரிகளுக்கு சொந்தக் காரரான குல்சார் சாகேப், ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண் , எடிட்டர் ஆரிப் சாகிப் மற்றும் நடிகர் ரஜத் கபூர் என எல்லாருமே தேசிய விருதை வென்றவர்களே.

எல்லாமே விருது தான் :

எல்லாமே விருது தான் :

இரண்டு முறை தேசிய விருது பெற்ற வியா காம் 18 மோஷன் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தில உள்ளவங்க எல்லாருக்கும் ஒரு போட்டி வைச்சா தலைப்பு என்னவா இருக்கும் - அதிக முறை தேசிய விருதை வென்றவர்கள் யார் ? என்ன சரிதானே.

English summary
10 national award winners joining a new movie drishyam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil