For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மங்காத்தா 10 ஆண்டுகள் நிறைவு.. இணையதளத்தை தெறிக்க விடும் அஜித் ஃபேன்ஸ்!

  |

  சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான மங்காத்தா திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியிருப்பார்.

  த்ரிஷா, ஜெயப்பிரகாஷ் ,பிரேம்ஜி அமரன், மகத் ,வைபவ், ராய் லக்ஷ்மி என பலர் நடித்திருந்த இந்தப் படம் அஜித்திற்கு 50வது படமாக வெளியானது.

  ஆபாச பட விவகாரம்.. அவரு காசு ஒரு பைசா வேண்டாம்.. குந்தைகளுடன் கணவரை பிரியும் நடிகை ஷில்பா ஷெட்டி! ஆபாச பட விவகாரம்.. அவரு காசு ஒரு பைசா வேண்டாம்.. குந்தைகளுடன் கணவரை பிரியும் நடிகை ஷில்பா ஷெட்டி!

  யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற படத்தின் வசூல் பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்டது. இந்த நிலையில் இன்றோடு மங்காத்தா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

  மங்காத்தா

  மங்காத்தா

  நடிகர் அஜித் குமார் நடித்த கதாபாத்திரங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்த திரைப்படங்கள் வெகு சிலவை மட்டுமே . இந்த வகையில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்த மங்காத்தா இன்றுவரை தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக இருந்து வருகிறது. சென்னை-28 மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு அதைத்தொடர்ந்து கோவா,சரோஜா உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி மேல் வெற்றி கொடுத்தார். இந்த நிலையில் அஜித்துடன் முதல்முறையாக இணைந்து மங்காத்தா என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. நடிகர் அஜித் பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மங்காத்தா திரைப் படத்தில் ஹீரோ கலந்த வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.

  பிரமாதமான பிஜிஎம்

  பிரமாதமான பிஜிஎம்

  இதுவரை பார்த்திராத புது அஜித் இந்த படத்தில் தோன்ற ரசிகர்களால் வேற லெவலில் கொண்டாடப்பட்ட மங்காத்தா திரைப்படம் பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிட்டு வசூலை அள்ளியது. அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பட்டையை கிளப்பும் இசையை கொடுத்திருந்தார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக அமைய இந்த படத்தின் பிஜிஎம்-கென்றே படம் பல நாட்கள் ஓடியது. தமிழ் சினிமாவின் பிஜிஎம் கிங் என போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே அஜீத்தின் பில்லா படத்தில் அட்டகாசமான பிஜிஎம்மை கொடுத்துவிட்டு அதன் பிறகு மீண்டும் மங்காத்தா படத்தில் இருவரும் இணைய இந்த முறையும் பிஜிஎம்மில் கலக்கியிருப்பார். ரஜினிகாந்தின் பிரபல பாடல்களில் ஒன்றான ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலின் ரீமிக்ஸ் இந்த படத்தில் இடம்பெற ரசிகர்களை பார்ட்டி மோடில் ஆட்டம் போட மச்சி ஓப்பன் தி பாட்டில் கிக் ஏற்றும் விளையாடு மங்காத்தா பாடல், ரொமான்ஸுக்கு வாடா பின்லேடா பாடல் , காதலுக்கு நீ நான் பாடல், துரோகத்திற்கு நண்பனே பாடல், புத்துணர்ச்சி பல்லேலக்கா பாடல் என யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடல்களும் தனி ரகம் அனைத்தும் புதுராகமாக இருந்தது .

  ரவுடிகளை போட்டுத்தள்ளும் போலீஸ்

  ரவுடிகளை போட்டுத்தள்ளும் போலீஸ்

  ஜாலியான படங்களை இயக்கி வந்த இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா படத்தையும் ஜாலியான படமாக அதேசமயம் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான இந்த படத்தில் அஜித் குமார் சைலன்ட்டாக ரவுடிகளை உளவு பார்த்து போட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். நடிகர் அர்ஜூன் அஜித்தின் நண்பராக போலீஸ் அதிகாரி வேடத்தில் கம்பீரமாக நடித்து பாராட்டுக்களைப் பெற்று இருப்பார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு சந்தேகமும் அஜித் கதாபாத்திரத்தின் மீது விழாத அளவிற்கு மிக அட்டகாசமான திரைக்கதை இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியிருக்க கடைசியாக அஜித் ஒரு போலீஸ் அதிகாரி என்பது தெரியவரும் ட்விஸ்ட் பார்க்கும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்து விசில் பறக்க விட்டது. நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு இருக்கும் நரை மூடியை மறைத்துக்கொண்டு நடிக்க ஆசைப் படுவார்கள் ஆனால் அஜித் மங்காத்தா படத்தில் சால்ட் அண்ட் பெப்பரில் ரியல் லுக்கில் தோன்றி அசால்ட் செய்திருந்தார். . மங்காத்தா திரைப் படம் வெளியானதற்கு பிறகு பலரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வர ஆரம்பித்தனர் பின் அதுவே ட்ரெண்ட்டானது.

  #HBDYUVAN ரசிகர்களுக்கு ஆண் குரலில் ஒரு தாயாய்.. இசையுடன் தோன்றும் யுவன்.. குவியும் பிறந்தநாள் வாழ்த்து
  மணி.. மணி.. மணி...

  மணி.. மணி.. மணி...

  நடிகர்களின் திரைவாழ்க்கையில் 60 படம் என்பது மிக முக்கியமான படம் அந்த வகையில் அஜித்குமாருக்கு 50 படம் மிக கச்சிதமாக அமைந்தது என்றே சொல்லலாம். மங்காத்தா வெற்றியைத் தொடர்ந்து மங்காத்தா பாகம் 2 வெளியாகும் என கூறப்பட்டாலும் அது பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களால் பெருமளவில் உச்சரிக்கப்பட்டது அதிலும் குறிப்பாக மணி.. மணி.. மணி... என அஜித் கூறும் வசனம் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் ரசிக்க வைத்தது. காதல் மன்னனாக வலம் வந்த அஜித் குமார் இப்படத்தில் செம ஜாலியாக எந்த அளவுக்கு நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு ரசித்து ரசித்து நடித்திருப்பார் . ஆரம்பத்தில் த்ரிஷா அஜித்தை காதலிப்பதாக காட்டி பிறகு ட்விஸ்ட் வைக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்றது. அதேபோல கொள்ளையடித்த பணத்தை ஒருவரிடமிருந்து ஒருவர் எப்படி ஆட்டையைப் போடுவது என அனைவரும் ஒரு மனக்கணக்கு போட அஜித் வேறு விதமாக செஸ் விளையாட்டின் மூலம் பிளான் போடும் மாஸ் காட்சி வேற லெவல். குறிப்பாக அதிலும் இன்டர்வல் பிளாக் டாப் நாட்ச் என்று சொல்லலாம்.

  10 ஆண்டுகள் நிறைவு

  10 ஆண்டுகள் நிறைவு

  இவ்வாறு காட்சிக்குக் காட்சி மங்காத்தா படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருந்த வெங்கட் பிரபுவுக்கு இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றி பெற கடந்த 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா இன்றோடு 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் சமூகவலைதளங்களில் மங்காத்தா 10 ஆண்டுகளை நிறைவு பெறுவதை கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  actor Ajithkumar's cinema journey as it marked his 50th film. Today marks the 10th year since the release of Mankatha and fans have been recalling the memories about the film on social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X