»   »  விக்ரமின் கருடாவுக்காக 100 ஏக்கரில் பிரமாண்ட செட்!

விக்ரமின் கருடாவுக்காக 100 ஏக்கரில் பிரமாண்ட செட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் நடிக்கும் புதிய படமான கருடாவுக்காக சென்னைக்கு அருகே 100 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைத்துள்ளனர்.

‘இருமுகன்' படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் ‘கருடா'. இப்படத்தை ‘சமர்', ‘நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர்

மகேஷ் மஞ்ச்ரேக்கர்

மேலும், வில்லனாக மகேஷ் மஞ்ச்ரேக்கர் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கவிருக்கிறார். இவர் இந்தியில் பிரபல இயக்குனராகவும் வலம் வருகிறார். ‘குருஷேத்ரா', ‘நிடான்', ‘பிதா' உள்ளிட்ட 23 படங்களை இவர் இயக்கியுள்ளார். ‘ஸ்லம் டாக் மில்லியனர்', ‘ரெடி' தமிழில் ‘ஆரம்பம்' படத்திலும் நடித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இவருடன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், கருணாஸும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக ஏப்ரல் 1-ந் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க இருக்கின்றனர்.

100 ஏக்கரில்

100 ஏக்கரில்

இப்படத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது.

ஆக்ஷன் படம்

ஆக்ஷன் படம்

பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. கிரிநந்த் இசையமைக்கும் இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் லைன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.

English summary
There is a huge set in 100 acres errected for Vikram's Garuda movie near Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil