»   »  'குண்டு' ஆர்த்தி இல்லாம 100 நாள் சுதந்திரமா இருப்பேன்! - கணேஷ்

'குண்டு' ஆர்த்தி இல்லாம 100 நாள் சுதந்திரமா இருப்பேன்! - கணேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனைவி ஆர்த்தி 100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 'உள்ளே' இருப்பதால், நான் சுதந்திரமாக இருப்பேன் என்று அவரது கணவர் கணேஷ் கூறியுள்ளார்.

பிக் பாஸ் குடும்பத்தில் இருப்பவர்களிலேயே மிக மோசமான, வெறுக்கப்படும் பெண்ணாக இருப்பவர்கள் இருவர். ஒருவர் காயத்ரி ரகுராம். இன்னொருவர் குண்டு ஆர்த்தி. பார்வையாளர்களை தங்கள் பேச்சாலும், செய்கைகளாலும் அப்படி எரிச்சலூட்டுகின்றனர்.

100 days freedom: Aarthi hubby happy

சீரியல் வில்லிகள் தோற்றார்கள் இவர்களிடம்.

ஆர்த்தியின் கணவர் கணேஷிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "ஆர்த்தி செய்வது எனக்கும் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியின் நோக்கமே பிக் பாஸ் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் ஆர்த்தி செய்வது சரிதான்.

முதலில் ஆர்த்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தார். ஆனால் நானும் ஆர்த்தியின் அப்பாவும்தான் அவரை கலந்து கொள்ள வைத்தோம். முக்கியமாக ஆர்த்தி இல்லாமல் எனக்கு நூறு நாள் சுதந்திரமாச்சே!," என்றார்.

அப்படின்னா.. ஆர்த்தி 100 நாட்களும் பிக் பாஸ் வீட்டில்தான் இருக்கப் போறாங்களா...!

English summary
Aarthi's husband Ganesh is very happy to live with out her for at least 100 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil