»   »  ஜி.வி.பிரகாஷ் எதைப் பார்த்து காப்பி அடிக்கிறார்னு பாருங்க... - 100% காதல் ஃபர்ஸ்ட் லுக்!

ஜி.வி.பிரகாஷ் எதைப் பார்த்து காப்பி அடிக்கிறார்னு பாருங்க... - 100% காதல் ஃபர்ஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் '100% லவ்'. 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் ஜி.வி.பிரகாஷ். இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. லாவண்யா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

100% kaadhal first look poster released

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருந்த வேலையில், தேதிகள் பிரச்னை காரணமாக லாவண்யா திரிபாதி விலகிவிட்டார். தற்போது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழில் ஷாலினி பாண்டே அறிமுகமாகும் முதல் படமாக '100% காதல்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபு இன்று வெளியிட்டார். கல்லூரிக்கால காதல் கதையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more about: love, காதல்
English summary
GV Prakash and Shalini Pandey are acting in the film '100% kaadhal' which was the tamil remake of '100% love' telugu film. Director Venkat prabhu released the first look poster of this film today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil