»   »  ஜி.வி.பிரகாஷ் - 'அர்ஜுன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே பட ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் - 'அர்ஜுன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே பட ரிலீஸ் எப்போ தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜி வி பிரகாஷின் 100% காதல் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிப்பு- வீடியோ

சென்னை : ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொண்டு ஒரு நடிகராக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக அக்கறையோடு பலவிஷயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

பிஸியாக பல படங்களில் நடித்து வரும் இவர்தான் இப்போதைக்கு அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகரும் கூட. அவ்வப்போது சமூக நலனோடு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சாமானிய மக்களுக்கு ஆதரவாகவும் கருத்துகளையும் கூறி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

100% kaadhal movie release

இந்நிலையில் தற்போது சந்திரமௌலி இயக்கும் '100% காதல்' படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் நடிக்கிறார். நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் விதமாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
GV Prakash is currently acting in '100% kaadhal' in the direction of Chandramouli. Shalini Pandey is playing the heroine role in this film. GV Prakash's film is going to be shot and the film's new poster has been released to wish the Christmas festival yesterday. The film will be released in April next year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X