Don't Miss!
- News
அணி திரண்ட சிங்குகள்.. பஞ்சாப் பல்கலையில் பிபிசி ஆவணப்படம் திரையிடல்! புரட்சி என ஆம் ஆத்மி பாராட்டு
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Finance
Budget 2023: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்.. கவனிக்க வேண்டியது என்ன?
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Technology
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்...இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
1000 கோடி கிளப்பில் இணைந்த இந்திய படங்கள்... தமிழ் படம் இருக்கா ?
சென்னை : 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்த இந்திய படங்களின் பட்டியலில் தற்போது நான்காவதாக கேஜிஎஃப் 2 படம் இணைந்துள்ளது. இந்த படம் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருவதால் முதலிடத்தை பிடிக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலக அளவில் 1000 கோடிகளை வசூல் செய்யும் படங்களின் பட்டியல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் பலவும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று, மிக விரைவில் 1000 கோடி கிளப்பில் இணைந்து வருவது பலரையும் ஆச்சரியும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
அதள
பாதாளத்தில்
அஜய்
தேவ்கன்
பட
வசூல்..
’இந்தி’
புரமோஷன்
எடுபடவில்லையா?
நின்னு
பேசும்
கேஜிஎஃப்
2!

1000 கோடி வசூல் படங்கள்
இதுவரை உலக அளவில் 1000 கோடிகளை வசூல் செய்த படங்களின் பட்டியலில் இந்திய படங்கள் 4 மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதுவரை அமீர்கானின் டங்கள், ராஜமெளலியின் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்கள் மட்டுமே இணைந்திருந்தன. இந்த பட்டியலில் தற்போது கேஜிஎஃப் 2 படமும் இணைந்துள்ளது. ஒரு மாத இடைவெளியில் ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.

முதல் இந்திய படம் டங்கள்
2016 ம் ஆண்டு அமீர் கான் நடித்து கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமான டங்கள், மொத்தமாக உலகம் முழுவதும் 2112 கோடிகளை வசூல் செய்தது. இதுவரை வேறு எந்த இந்திய படமும் இந்த சாதனையை நெருங்கக் கூட இல்லை. 2000 கோடி கிளப்பில் இணைந்த முதல் மற்றும் ஒரே இந்திய படம் டங்கள் தான். இதைத் தொடர்ந்து 2017 ல் வெளிவந்த பாகுபலி 2 படம் 1809 கோடிகளை வசூல் செய்தது.

டங்கள் வசூலை நெருங்கும் கேஜிஎஃப் 2
2022 ம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் 1118 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசான கேஜிஎஃப் 2 படம் 1006 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனால் விரைவில் ஆர்ஆர்ஆர் மற்றும் பாகுபலி 2 படங்களின் வசூல் சாதனையை முறியடித்து கேஜிஎஃப் 2 இரண்டாம் இடத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டங்கள் படத்தின் வசூலை எட்டுமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் படம் இருக்கா இதில்
1000 கிளப்பில் இணைந்த இந்திய படங்களின் பட்டியலில் இந்தி படமான டங்கள், தெலுங்கு படங்களான பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர், கன்னட படமான கேஜிஎஃப் 2 மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஒரு தமிழ் மற்றும் மலையாள படம் கூட இல்லாதது அனைவரையும் அதிர்ச்சி அடையவும், வேதனை அடையவும் வைத்துள்ளது.
Recommended Video

ஏன் என்ன தான் காரணம்
தமிழில் திறமையான டைரக்டர்கள், நல்ல கதைகள் உள்ள படங்கள் இருந்தும் இதுவரை ஒரு தமிழ் படம் கூட 1000 கோடி கிளப்பில் இணையாதது ஏன் பலரும் கேட்டு வருகிறார்கள். அனைத்து தரப்பினரையும் கவரும் கதை கொண்ட படங்களை டைரக்டர்கள் இயக்குவதில்லையா அல்லது சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க நடிகர்கள் தவறுகிறார்களா என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.