»   »  'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன்! - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது

'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன்! - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் சாஹித் கபூர் நடிப்பில் சரித்திரப் படமாக பத்மாவதி படம் உருவாகி வருகிறது.

கடந்த சில தினங்களாக ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், டிசம்பர் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

102 not out moves from december 1 due to padmavati release

அந்த தேதியில் தான் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிப்பில் உருவாகி வரும் '102 நாட் அவுட்' படமும் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது '102 நாட் அவுட்' படத்தை இருவாரங்கள் தள்ளி வைத்துள்ளனர்.

பத்மாவதி உடனான மோதலை தவிர்க்கும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளதாக கூறப்படுகிறது. '102 நாட் அவுட்' படத்தில், 102 வயது அப்பாவாக அமிதாப்பும், அவரது 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடிக்கின்றனர். அப்பா-மகன் இடையேயான பாசத்தை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் உமேஷ் சுக்லா.

English summary
Sanjay Leela Bhansali, has been directing 'Padmavati' as a historical film. The movie 'Padmavati' has been announced on December 1 release. '102 N0t Out' has been postponed for two weeks to avoid confrontation with 'Padmavati'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil