»   »  103 வயது தமிழ் திரைப்பட இயக்குநர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்!

103 வயது தமிழ் திரைப்பட இயக்குநர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

103 வயது பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் சென்னையில் காலமானார்.

தியாகராஜ பாகவதர், பியு சின்னப்பா, டிஆர் மகாலிங்கம் போன்ற பழம் பெரும் கலைஞர்களை இயக்கிய, தமிழின் மூத்த இயக்குநர் ஆன்டனி மித்ரதாஸ்.

103 years old Tamil director Antony Mithradas passes away

1913-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் ஆன்டனி மித்ரதாஸ். அமெரிக்கன் கல்லூரியில் பிஏ புள்ளியல் படித்தவர், சினிமா ஆசையில் கொல்கத்தா சென்று, திரைப்படக்கல்லூரியில் பயின்றார். அங்கு இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கனைச் சந்தித்தார். அவர்தான் மித்ரதாஸை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டிஆர் சுந்தரத்திடம் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரைதான் 1941-ல் அவருக்கு தயாளன் படம் இயக்கும் வாய்ப்பைத் தந்தது. அவரது முதல் பட ஹீரோ பியு சின்னப்பா. அவருடன் டிஆர் மகாலிங்கமும் இணைந்து நடித்தார் அந்தப் படத்தில்.

அதன்பிறகு டி.ஆர்.துரைராஜ் அறிமுகமான 'பிழைக்கும் வழி' என்ற நகைச்சுவை படத்தை இயக்கினார். பிரேம் நசீர் நடித்த பால்யசகி, அவகாசி, திக்குறிச்சி சுகுமாரன் நடித்த அரிச்சந்திரா ஆகிய மலையாள படங்களையும் அவர் இயக்கினார்.

அவர் கடைசியாக இயக்கிய படம் சிவகாமி. 1960 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் ஹீரோ தியாகராஜ பாகவதர்.

103 years old Tamil director Antony Mithradas passes away

ஆன்டனி மித்ரதாஸ் தந்தை அருளானந்தம் முதல் உலகப்போரில் கலந்து கொண்டவர். ஆண்டனி மித்ரதாஸும் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தவர்.

இவர் சென்னை மேற்கு அண்ணாநகர் டி.வி.எஸ்.காலனியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஆண்டனி மித்ரதாஸுக்கு எலிசபெத் என்ற மனைவியும் உஷா என்ற மகளும் உள்ளனர். ஆண்டனி மித்ரதாஸ் உடல் தானம் செய்து இருந்ததால் இறுதி சடங்குகளுக்கு பிறகு மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது உடலை எடுத்துச் சென்றனர்.

Read more about: film director tamil cinema
English summary
103 years old film director Antony Mithradass was passed away in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil