அட பாவமே...இப்படியா ஆகணும்...விதார்த் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா

சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விதார்த் குடும்பத்தில் அவரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விதார்த் குடும்பத்தில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

11 members from actor Viddharth family affected by covid

மின்னலே, மெளனம் பேசியதே, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து நடிகரானவர் விதார்த். 2010 ல் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ஹீரோ ஆனார். இது வெற்றி பெற்று, இவருக்கு விருதுகளும் கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராகி விட்டார் விதார்த்.

பிறகு வீரம், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும் பில்லா பாண்டி, காற்றின் மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். லேட்டஸ்டாக ஹிப்ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் பசுபதி என்ற வில்லன் ரோலில் நடித்து பெயர் வாங்கினார். ஓடிடி.,யில் வெளியாகி உள்ள அன்பறிவு அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. விதார்த்தின் நடிப்பும் கவனிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது கார்பன், ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விதார்த். இந்நிலையில் அவரது குடும்பத்தில் அப்பா, அம்மா, தங்கை, மாமனார் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விதார்த் குடும்பத்தில் உள்ள 11 பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரை பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்தடுத்து பலரும் பாதிக்கப்படுவது, சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது என அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கோலிவுட்டையே கலங்க வைத்துள்ளது.

விதார்த் குடும்பத்தினர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்தும், பிரார்த்தனையும் தெரிவித்து வருகின்றனர். விதார்த்திற்கு திருமணமாகி ஐந்து வயதில் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X