For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மங்காத்தா 11 வருட கொண்டாட்டம்.. அன்சீன் போட்டோவை வெளியிட்ட வெங்கட்பிரபு!

  |

  சென்னை : வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த மங்காத்தா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டு முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் வெங்கட்பிரபு அன்சீன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான திரைப்டம் மங்காத்தா அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல், வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தியது இந்த படம்.

  இந்த படத்தில் ஜெயப்பிரகாஷ். வைபவ், பிரேம்ஜி, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

  வெங்கட் பிரபு சொன்ன மங்காத்தா 2 அப்டேட்...இதை நாங்க எதிர்பார்க்கவேயில்லையே வெங்கட் பிரபு சொன்ன மங்காத்தா 2 அப்டேட்...இதை நாங்க எதிர்பார்க்கவேயில்லையே

  இயக்குநர் வெங்கட் பிரபு

  இயக்குநர் வெங்கட் பிரபு

  இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானத் திரைப்படம் மங்காத்தா. இளம் நடிகர்களை வைத்து படம் எடுத்து வந்த வெங்கட் பிரபு, ஒரு நட்சத்திர நடிகரை வைத்து வித்தியாசமான கதையை கொடுத்திருந்தார். சரோஜா, சென்னை 28 என இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருந்த வெங்கட்பிரபுக்கு அஜித் மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார்.

  மேட்ச் ஃபிக்ஸிங்

  மேட்ச் ஃபிக்ஸிங்

  மங்காத்தா படத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, மும்பையில் வைத்துக் கைமாற்றுகிறார் மாஃபியா புள்ளி ஜெயப்ரகாஷ். அவரிடம் இருந்து 500 கோடியை பக்காவாக பிளான் போட்டு நான்கு பேர் சேர்த்து அபேஸ் பண்ண திட்டம்தீட்டுகிறார்கள். அந்த கூட்டத்தில் ஒருவனாக நுழைகிறார் அஜீத். இறுதியில் 500 கோடியை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை செம ட்விஸ்டுடன் கதை செல்லும்.

  அஜித்தின் 50வது

  அஜித்தின் 50வது

  அஜித்தின் 50வது படமான மங்காத்த திரைப்படத்தில் அஜித் மட்டுமல்லாமல் நாயகி த்ரிஷா மிக அழகாகக் காட்சியளித்தார். அஜித்துக்கும் அவருக்குமான கெமிஸ்டிரி பொருத்தமாக இருந்தது. இவை எல்லாத்தையும் விட அர்ஜுனுக்கு சிறப்பான ரோல். அவரும் அதைச் சரியாக உள்வாங்கி புலிக்கு பாய சொல்லித்தரனுமா என்பது போல மிரட்டி இருப்பார்.

  அனைவருமே வில்லன்

  அனைவருமே வில்லன்

  அஜித்,அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் என எந்த பக்கம் பார்த்தாலும் வில்லன் தான்.படம் முழுக்க தேடிப்பார்த்தாலும் ஹீரோவே இல்லை. படத்திற்கு ஹீரோ கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை, இப்படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு உடைத்து எறிந்து இருப்பார்.

  அதிரடி ஹிட் பாடல்

  அதிரடி ஹிட் பாடல்

  வாடா பின்லேடா, விளையாடு மங்காத்தா என யுவுன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை, மங்காத்தா தீம் மியூசிக் என அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, பிரவீன் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு, கலை இயக்கம் என அனைத்தும் படத்திற்கு வெற்றிக்கு வித்திட்டது எனலாம்.

  #11YearsOfCultMANKATHA

  #11YearsOfCultMANKATHA

  மங்காத்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் ஆகிறது. அதனைக்கொண்டாடும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என கூறி மங்காத்தா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் #11YearsOfCultMANKATHA என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

  English summary
  11 years of Mankatha : venkat prabhu shared mankatha unseen stills : அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் 11 வருட கொண்டாட்டம்.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X