»   »  12.12.1950... எல்லா ஹீரோக்களின் ரசிகர்களுக்குமான படம்!

12.12.1950... எல்லா ஹீரோக்களின் ரசிகர்களுக்குமான படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதென்ன 12-12-1950? அது பிரபல நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த தேதி.

இந்தக் கதை ஒரு ரஜினி ரசிகரைப் பற்றிய கதை என்பதால் படத்திற்கு ரஜினிகாந்தின் பிறந்த தேதியான 12-12-1950 யே டைட்டிலாக வைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் செல்வா.

இயக்குநரும், நடிகருமான செல்வாதான் இப்படத்தில் தன்னுடைய பெயரை கபாலி செல்வா என்று மாற்றிக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'கோல்மால்' படத்தை இயக்கியவர் இவர்தான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.

திடீரென்று ரஜினி ரசிகராக மாறி விட்டாரா செல்வா?

40 ஆண்டு கால ரசிகன்

40 ஆண்டு கால ரசிகன்

அதெல்லாம் இல்லை. நான் 40 ஆண்டுகளாகவே ரஜினி சாரின் தீவிர ரசிகன்தான். அப்படிப்பட்ட எனக்கு பல வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த சம்பவம்

அந்த சம்பவம்

28 வருடங்களுக்கு முன்பு கேஸினோ தியேட்டர் அருகில் ரஜினி சார் நடித்த ஒரு படத்தின் போஸ்டரை சிலர் கிழித்துக் கொண்டிருந்தார்கள். நான் கோபப்பட்டு அவர்களை அடித்து விட்டேன்.

அடி வாங்கிய அவர்கள் போய்விட்டு பின் பல பேரை அழைத்துக் கொண்டு என்னை அடிக்க வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினேன். அந்த சம்பவம் இந்த படம் உருவாக ஒரு விதையாக அமைந்தது. அந்த சம்பவத்தையும் படத்தில் ஒரு காட்சியாக வைத்திருக்கிறேன்.

செம ரெஸ்பான்ஸ்

செம ரெஸ்பான்ஸ்

சமீபத்தில்தான் இந்தக் கதையை முடித்து தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு சாரிடம் சொன்னேன். கதையை கேட்டவுடன் அவரும் ஓகே சொன்னார். இப்படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘பேர கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல' என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. அதற்காக அவரது ரசிகர்களுக்கு நன்றி.

ரஜினி வாழ்த்து

ரஜினி வாழ்த்து

பிப்ரவரியில் கதை ஓகே ஆனவுடன் ரஜினி சாரிடம் போய் ஆசீர்வாதம் வாங்கினேன். 'வேர்ல்ட் ஆண்டி ஸ்மோக்கிங்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன். அதைப் பற்றி ரஜினி சாரிடமும் சொல்லி வாழ்த்துப் பெற்றேன்.

ஒரு லட்சம் குழந்தைகளிடம் கையெழுத்து

ஒரு லட்சம் குழந்தைகளிடம் கையெழுத்து

இந்த வருடம் ரஜினி பிறந்த நாளில் 1 லட்சம் குழந்தைகளிடம் எதிர்காலத்தில் புகைப் பிடிக்க மாட்டேன் என கையெழுத்து வாங்கிய பாண்ட் பத்திரங்களை அவரது பிறந்த நாள் பரிசாக ஒப்படைக்க உள்ளேன்," என்று சொல்லும் கபாலி செல்வா இந்தப்படத்தை நாயகியே இல்லாமல் எடுத்திருக்கிறார்.

நாயகி தேவையில்லை

நாயகி தேவையில்லை

"ஆமாம், இந்தக் கதைக்கு நாயகியே தேவையில்லை என்று கதை எழுதும் போதே முடிவு செய்தேன். அதனால் படத்தில் நாயகி என்று யாரும் இல்லை," என்றவர் இன்னொரு விஷயத்தை அழுத்தமாகச் சொன்னார். "

இந்தப் படத்தை ரஜினி ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கவில்லை. எல்லா ரசிகர்களுக்காகவும் தான் எடுத்திருக்கிறேன், அந்த வகையில் இந்தப்படம் எல்லோரையும் கவரும்," என்றார்.

English summary
12.12.1950 is a movie based on some true life incidentsof a Rajini fan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil