»   »  12.12.1950... ஒரு ரஜினி ரசிகனின் கதை!

12.12.1950... ஒரு ரஜினி ரசிகனின் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் செல்வா தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடைய தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். பல படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ள இவர் கோல்மால் என்ற படத்தையும் இயக்கியும் உள்ளார்.

நீண்ட இடை வெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், '12 .12. 1950'. ரஜினிகாந்தின் பிறந்த நாளைக் குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்கிறார் செல்வா.

நேற்று நடிகர் சிவகார்திகேயனால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த படத்தின் அசையும் போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ரஜினி ரசிகன்

ரஜினி ரசிகன்

"இந்த படத்தின் தலைப்பு அவருடைய சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை. அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும். 12 12 1950 அந்த மாமனிதனுடன், அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வு பூர்வமான கதை. அவருடைய பஞ்ச் வசனங்களை எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை.

இதான் கதை

இதான் கதை

தான் தெய்வமாக கருதும், சூப்பர் ஸ்டாரின் படம் வெளி வரும் நாள் ஒரு ரசிகனுக்கு பண்டிகை போல. அத்தகைய ஒரு நாளில் அந்த படத்தைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து உணர்வுப்பூர்வமாகச் சொல்லி இருக்கிறோம்.

கலைஞர்கள்

கலைஞர்கள்

ரஜினி சாருடைய தீவிர ரசிகனாக நான் நடிக்க தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், ஜான் விஜய், பொன்னம்பலம், ரமேஷ் திலக், ஆதவன், அஜய், சாமிநாதன், ரிஷா, ஷபி, அஸ்வினி சந்திரசேகர், பிரஷாந்த், மற்றும் பலர் நடிக்க இளம் இசை அமைப்பாளர்கள் ஆதித்யா - சூர்யா இசை அமைக்க, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு ஸ்ரீ ஒளி பதிவு செய்துள்ளார்.

72 சதவீத காமெடி, 28 சதவீதம் ஜிஎஸ்டி

72 சதவீத காமெடி, 28 சதவீதம் ஜிஎஸ்டி

ஜ்யோஸ்டார் என்டர்டெயின்மென்ட் என்கிற பட நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடை பெறுகின்றன. இந்தப் படம் 72% காமெடி, 28 % GST ( Ganster, comedy and Thriller),'' என்கிறார் செல்வா.

Enthiran 2.0 Audio Launch Planned In Dubai-Filmibeat Tamil
English summary
Actor Selva is directing his second movie titled 12.12.1950, the date indicates Superstar Rajinikanth's birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil