For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி: நடிகர் பாக்யராஜ் தாக்கு

  By Siva
  |

  கோவை: ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி. அவரைத் தேர்ந்தெடுத்தால் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பாரே தவிர மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தமாட்டார் என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

  கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக நடிகர் பாக்யராஜ் நேற்று புலியகுளம், திருச்சி ரோடு எல்.ஜி.பி, மட்டசாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

  அப்போது அவர் பேசியதாவது,

  ஜெயலலிதாவுடன் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு படாதபாடு படுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் இருந்த வைகோவையே ஒரு நிமிடத்தில் தூக்கி வீசிவிட்டார். அவருடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கும் அதே நிலை தான் ஏற்படும்.

  ஒரு கேப்டன் வழிதவறி நடுக்கடலுக்குள் சென்றுவிட்டான். திரும்பி வர வழி தெரியவில்லை. உண்ண உணவின்றி கப்பலில் உள்ளவர்கள் தவிக்கின்றனர். பசிக் கொடுமை தாங்கமுடியாமல் ஒருவரையொருவர் அடித்துக் கொன்று மனித மாமிசம் சாப்பிடத் துவங்கினர். இதைப் பார்த்த கேப்டன் எங்கே தன்னையும் அடித்துக் கொன்று தின்றுவிடுவார்களோ என்ற பயத்தில் கப்பலின் மேல்தளத்திற்கு சென்றான். என் கைத்துப்பாக்கியால் என்னை நானே சுட்டுக் கொல்கிறேன், அதன்பிறகு என்னை சாப்பிடுங்கள் என்றான்.

  தற்கொலைக்கு முயன்றாலும் யாராவது நம்மை காப்பாற்ற வரமாட்டார்களா என்று உள்ளுக்குள் ஏங்கினான். அவன் நினைத்த மாதிரியே ஒரு பெண் ஓடி வந்து அவனைத் தடுத்தாள். அவள் தான் அந்த கூட்டத்திற்கு தலைவி. அவன் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கினாள். அப்பாடா ஒருத்தியாவது வந்து காப்பாற்றினாளே என்று கேப்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டான். உடனே அவள் நீ தலையில் சுட்டால் மூளை சிதறவிடும். பிறகு என்னால் மூளைக்கறி சாப்பிட முடியாமல் போய்விடும். அதனால் நெஞ்சில் சுட்டுக் கொல் என்றாள். இதைக் கேட்ட அவன் மிரண்டு போய்விட்டான். அந்த கேப்டனின் நிலைமை தான் இந்த கேப்டனுக்கு விரைவில் வரப்போகிறது.

  ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி. அவரைத் தேர்ந்தெடுத்தால் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாரே தவிர மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தமாட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியோ எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சுமூகமாகத் தீர்த்து, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவார் என்றார்.

  English summary
  Actor Bhagyaraj was campaigning in Coimbatore yesterday in support of DMK candidate minister Pongalur Palanisamy. At that time he told that ADMK chief Jayalalitha is known for fighting with everybody. If people selects her, she won't implement welfare schemes instead she keeps on fighting with the central government.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more