twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே வாரம்... 12 படங்கள்.. யார் பார்ப்பது!!

    By Shankar
    |

    இந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 புதிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன.

    விளம்பரங்களே இல்லாமல் வரும் இந்தப் படங்களுக்குப் போதிய அரங்குகள் கிடைக்குமா? பார்வையாளர்கள் இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்கள் தயாராகின்றன.

    தயாரிப்பாளர்கள் தவிப்பு

    தயாரிப்பாளர்கள் தவிப்பு

    இவை சென்சார் சான்று பெற்றும் கூட ரிலீசாகாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த படங்களை வாங்கி வெளியிட வினியோகஸ்தர்கள் முற்படுவதில்லை. சொந்தமாக வெளியிட தியேட்டர்களும் கிடைப்பது இல்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

    டிவி சேனல்கள் தவிர்ப்பு

    டிவி சேனல்கள் தவிர்ப்பு

    எப்படியாவது டிவி சேனல்களுக்கு விற்றால் போதும் என முயற்சித்தால், அதுவும் தோல்வியில் முடிகிறது. முன்பெல்லாம் கிடைத்த படங்களை வாங்கிக் கொண்டிருந்த சேனல்கள், இப்போது ஓரளவு நல்ல படங்கள் வரை வாங்குகின்றன.

    200 படங்கள்

    200 படங்கள்

    இதனால் கடந்த ஆண்டு சென்சாரான படங்களில் 200 முடங்கியுள்ளன. இந்தப் படங்கள் இனி வருமா என்றும் தெரியவில்லை.

    12 படங்கள்

    12 படங்கள்

    இந்த நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகாததால் நாளை மறுநாள் (28-ந் தேதி) ‘வல்லினம்', ‘தெகிடி', ‘அங்குசம்', ‘காதல் சொல்ல ஆசை', ‘அமரா' ஆகிய தமிழ்ப டங்களும், ‘வெற்றிமாறன்' என்ற மலையாள படமும், ‘நான் ஸ்டாப்', ‘பறக்கும் கல்லறை மனிதன்', ‘ஆக்ஷன் கிட்ஸ்' ஆகிய தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கில படங்களும், ‘கரன்சி ராஜா' என்ற தெலுங்கு டப்பிங் படமும் ரிலீசாகின்றன.

    வல்லினம்

    வல்லினம்

    இவற்றில் ‘வல்லினம்', ‘தெகிடி' படங்கள் மட்டும் நடுத்தர பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. ‘வல்லினம்' படத்தில் நகுல் நாயகனாக நடித்துள்ளார். கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

    ‘வல்லினம்' படத்தை 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட முயன்று வருகிறார்கள். மற்ற படங்களுக்கு 50 முதல் 75 அரங்குகள் வரை ஒதுக்க முயன்று வருகிறார்கள்.

    ஓடுமா?

    ஓடுமா?

    ஆனால் இந்தப் படங்களை யார் பார்ப்பது? அடுத்த வெள்ளி வரையாவது தாக்குப் பிடிக்குமா? என்ற கேள்விகள் விநியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் துளைத்து வருகின்றன.

    English summary
    There are 12 new films including dubbing movies are going to hit the screens on 28th February.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X