»   »  ஐபிஎல் வேற வருது... இந்த வாரமே பனிரெண்டு ரிலீஸ்!

ஐபிஎல் வேற வருது... இந்த வாரமே பனிரெண்டு ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் தற்போதைய நிலையில் முடங்கிக்கிடக்கும் படங்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டும். படம் எடுக்கும் செலவை விட ரிலீஸ் செய்யும் செலவு அதிகம் என்பதால் எடுத்துப் பார்த்துவிட்டு, இதுக்கு சர்க்கரை மூட்டை குடோன்லயே இருக்கலாம் என்று கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். ஆனால் சில படங்கள் நன்றாக இருந்தும் கூட தூங்குகின்றன.

பெரிய படங்கள் வழி விடும் வாரம் எல்லா படங்களும் சேர்ந்தாற்போல் உள்ளேன் ஐயா சொல்லும். அப்படி ஒரு வாரம்தான் அடுத்த வாரம்...


12 new releases this week

ஆக்கம், ஒரு கனவு போல..., இவன் யாரென்று தெரிகிறதா, பாம்புசட்டை, கடுகு, எங்கிட்ட மோதாதே, தாயம், 1 A.M, வைகை எக்ஸ்பிரஸ், 465, அரசகுலம், FIRE BALL, தில் இருந்தா வாடா.. (டப்பிங்) என 12 படங்கள் ரிலீஸ் போட்டியில் இருந்தன. இதில் தியேட்டர்கள் கிடைக்காமல் ஒரு கனவு போல மட்டும் இன்று பின்வாங்கியிருக்கிறது. இவை தவிர பவன் கல்யாணின் வீரம் ரீமேக்கான கட்டமராயுடுவும் இந்த வாரம் தான் ரிலீஸ்.


அடுத்த வாரமும் இதே எண்ணிக்கை தொடரலாம். ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடங்கவிருக்கிறது. மார்ச் 31 முதலே பெரிய படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. இந்த இரண்டும்தான் காரணங்கள்!

English summary
There are 12 small movies are releasing in Tamil in next week, due IPL launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil