விவாகரத்து கேட்டு நடிகர் சரத்பாபு மனைவி மனு: விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை கோபாலபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் சினேகலதா தீட்சித் (60). நடிகர் சரத்பாபுவின் மனைவி. கடந்த ஜூலை மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சினேகலதா விவகாரத்து மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், கோவிந்த மேனன் என்பவருக்கும் கடந்த 11.12.68 அன்று திருமணம் நடந்தது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம். இந்த நிலையில் சத்தியநாரயணன் தீட்சித்தை (நடிகர் சரத்பாபு, 62) சென்னை போட் கிளப்பில் அவரது 37வது வயதில் சந்தித்தேன். அவரை 2.7.90 அன்று ஹோட்டல் ஒன்றில் வைத்து மணந்து கொண்டேன்.
தற்போது அவரால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்படுகிறது. மனரீதியாக என்னை துன்புறுத்துகிறார். எனவே அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். அவரிடம் உள்ள ரூ.20 கோடி சொத்தில் எனது பங்கை மீட்டு தரத் வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தகுமாரி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக நடிகர் சரத்பாபு, சினேகலதா, அவர்களின் உறவுப் பெண் நீரு தீட்சித் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களுக்கு ஆலோசனை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











