twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முல்லைப் பெரியாறு: முதல்வர் ஆணைக்காக திரையுலகம் காத்திருக்கிறது! - கேயார்

    By Shankar
    |

    Keyar
    சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுக்காக தமிழ் திரையுலகம் காத்திருக்கிறது, என்று இயக்குனர் கேயார் கூறியுள்ளார்.

    முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும், படஅதிபர் மற்றும் இயக்குனருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை:

    முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரள அரசியல்வாதிகள் 'அணை உடைந்துவிடும்' என்று பீதியை கிளப்பி இரு மாநில மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி வருகின்றனர்.

    புதிய அணை கட்டுவதால் நிலநடுக்கம் வருவது தடுக்கப்படுமா? அப்படி வந்தாலும் புதிய அணை உடையாமல் இருக்குமா? என்பதை கேரள மக்களும், தலைவர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    தமிழ்நாட்டுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எப்போதெல்லாம், எங்கெல்லாம் பங்கம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்த் திரைப்படத் துறையும் இன உணர்வோடு தன்னை இணைத்துக் கொண்டு குரல் கொடுத்திருக்கிறது. அதற்காக போராடியிருக்கிறது. இப்போதும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டு மனம் விம்மிக்கொண்டு இருக்கிறோம்.

    நமது கலைக்குடும்பத்தின் சகோதரியும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டால் முல்லை பெரியாறு பிரச்சினையில், தமிழர்களின் வாழ்வாதார உரிமையை நிலைநாட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் உயிரை பணயம் வைத்து போராட தயங்கமாட்டோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கேயார்.

    English summary
    Film producer, director Keyar told that the entire film industry is waiting for the orders of CM Jayalalitha to show their solidority to the govt in Mullai Periyaru dam issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X