twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    14 படங்கள் ரிலீஸ்.. அக்டோபர் சாதனை நவம்பரிலும் தொடருமா?

    அசுரன், பிகில், கைதி என அக்டோபர் மாதம் தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றி மாதமாக அமைந்தது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் பெரிய படங்கள் உட்பட 14 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

    |

    சென்னை: அசுரன், பிகில், கைதி என அக்டோபர் மாதம் தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றி மாதமாக அமைந்தது.

    இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் ஆதித்ய வர்மா, சங்கத்தமிழன், எனை நோக்கி பாயும் தோட்டா, ஆக்‌ஷன் உட்பட 14 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

    அக்டோபரில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வசூல் மற்றும் விமர்சன ரீதியிலான வெற்றி நவம்பர் மாதத்திலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    'பிகில்' அடிக்கக்கூட ஆளில்லை.. பிரபல தியேட்டரில் காட்சி ரத்து.. விஜய் ரசிகர்கள் ஷாக்.!'பிகில்' அடிக்கக்கூட ஆளில்லை.. பிரபல தியேட்டரில் காட்சி ரத்து.. விஜய் ரசிகர்கள் ஷாக்.!

    100 கோடி கிளப்

    100 கோடி கிளப்

    பண்டிகை மாதமான அக்டோபரில் தமிழ் சினிமாவில் மொத்தம் 9 படங்கள் வெளியாகின. இதில், தனுஷின் அசுரன் அக்டோபர் 4ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தமிழில் நடிகர் தனுஷை 100 கோடி கிளப்பில் சேர்த்தது அசுரன். தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ள விஜய்யின் பிகில் திரைப்படம் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்துள்ளது.

    அக்டோபர் ரிலீஸ்

    அக்டோபர் ரிலீஸ்

    அக்டோபர் மாதம் தமிழில் மொத்தம் 14 படங்கள் வெளியாகின. அக்டோபர் 2ம் தேதி சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் சைரா நரசிம்ம ரெட்டி வெளியானது. 4ம் தேதி, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் அசுரன் படம் வெளியானது. அதே நாளில் ஜி.வி. பிரகாஷின் 100% காதல் திரைப்படமும் வெளியானது. 11ம் தேதி வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் பப்பி படம் வெளியானது. அதே நாளில், தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமான பெட்ரோமாக்ஸ் மற்றும் சித்தார்த் நடிப்பில் அருவம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. தீபாவளிக்கு முந்தைய வாரமான 18ம் தேதி எந்த போட்டியும் இன்றி ஷாமின் காவியன் ரிலீசானது. தீபாவளியை முன்னிட்டு 25ம் தேதி விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் வெளியாகி இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.

    மாஸ் ஹிட்

    மாஸ் ஹிட்

    அக்டோபர் மாதம் வெளியான படங்களில், தனுஷின் அசுரன், விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய மூன்று படங்கள் தான் மாஸ் ஹிட் கொடுத்துள்ளன. இந்த மூன்று படங்களையும் ரீமேக் செய்ய இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பயங்கர போட்டி நிலவி வருகிறது. தனுஷின் அசுரன் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது.

    ஃப்ளாப்

    ஃப்ளாப்

    அக்டோபர் மாதம் வெளியான 14 படங்களில் 3 படங்கள் மாஸ் ஹிட் அடித்தன. சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு தமிழில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தனுஷின் அசுரன் படைத்த வெற்றி என்றும் சொல்லலாம். அதற்கு அடுத்து வெளியான அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடையவில்லை.

    நவம்பர் ரிலீஸ்

    2019ம் ஆண்டு இறுதியை நெருங்கி வருகிறது. நவம்பர் மாதம் பண்டிகை இல்லை என்றாலும், 14 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா (வெளிவருமா?),

    பிக்பாஸ் ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., விஷாலின் ஆக்‌ஷன், சசிகுமாரின் நாடோடிகள் 2 (இன்னும் ரிலீசாகலையா), த்ரிஷாவின் கர்ஜனை, வைபவின் காட்டேரி, சுந்தர்.சியின் இருட்டு, கதிரின் ஜடா, சந்திப் கிஷனின் கண்ணாடி, சேரனின் ராஜாவுக்கு செக், ஸ்ரீபிரியங்காவின் மிக மிக அவசரம், பிழை மற்றும் தமயந்தி ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. எத்தனை படங்கள் இதில் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Vijay Sethupathi's Sangathamizhan, Dhanush's ENPT, Dhruv Vikram's Adithya Varma, Vishal's Action, Sasikumar's Nadodigal 2, Sundar C's Irutu and so many tamil films yet to be releasing this November.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X