»   »  நயன்தாராவுக்கு இன்னொரு ஸ்பெஷல் டே... காதலர் வாழ்த்து!

நயன்தாராவுக்கு இன்னொரு ஸ்பெஷல் டே... காதலர் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாராவின் கொண்டாட்டம் விக்னேஷ் சிவனுடன் தான்..வீடியோ

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சூப்பர்ஸ்டார் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். இன்று வரை ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் வெற்றி தோல்விகள், சர்ச்சைகள் என பல விஷயங்களைக் கடந்தவர் நயன்தாரா.

சரத்குமார் நடித்த 'ஐயா' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்தப் படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை எனும் பெயரினைப் பெற்றார். அதன்பிறகு ரஜினிகாந்த் ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

14 years of Nayanthara's cinema career

தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த 'அறம்' படம் மிகவும் பேசப்பட்டது. நயன்தாரா நடிக்கிறார் என்றாலே அந்த படத்துக்கு தனி மார்க்கெட் என்ற நிலை இப்போதும் நீடிக்கிறது.

இப்போதும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் நடிக்க வந்து நேற்றுடன் (டிசம்பர் 25) 14 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. 14 வருட நயன்தாராவின் திரையுலகப் பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏராளம்.

சோதனைகளைத் தாண்டி தனி ஒருத்தியாக நடைபோடும் நயன் தாராவை வாழ்த்தி #14YearsOfNayanism எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நாளுக்காக, அவரது காதலர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Lady Superstar Nayanthara starred with Superstar Rajini to Sivakarthikeyan in films. It has been 14 years since she came to act. For this day, her boyfriend Vignesh Shivan has congratulated her on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X