»   »  "தெறி".. பெண்களுக்கு ஸ்பெஷல் ஷோ .. பிரமாண்ட கட்-அவுட்.. கலக்கும் விஜய் ரசிகர்கள்

"தெறி".. பெண்களுக்கு ஸ்பெஷல் ஷோ .. பிரமாண்ட கட்-அவுட்.. கலக்கும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை மறுநாள் வெளியாகப் போகும் தெறி படத்தை வரவேற்கும் விதமாக பிரமாண்ட கட் அவுட்களுடன், விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் முதன்முறையாக பெண்களுக்கு தனிக் காட்சிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர்.


படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கிட்டத்தட்ட திருவிழா போல தெறி வெளியாவதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


சோலோ ஹீரோ

சோலோ ஹீரோ

விஜய், நைனிகா முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் வெளியாகிறது. தெறி தவிர்த்து அன்றைய தினம் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. இதனால் பாக்ஸ் ஆபீஸில் சோலோ ஹீரோவாக விஜய் களமிறங்குகிறார்.


ராம் தியேட்டர்

தெறி படத்தை வரவேற்கும் விதமாக சுமார் 140 உயர பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை விஜய் ரசிகர்கள் நெல்லை ராம் தியேட்டரில் வைத்துள்ளனர். 2 மாடிகளை நிறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த கட்-அவுட், தன்னைக் கடந்து செல்லும் நெல்லை மக்களை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த கட்-அவுட் குறித்து விஜய் ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.


காரைக்குடி

இதுதவிர காரைக்குடி சத்தியன் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒன்றையும் விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். காலை 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் காட்சிக்கு இதுவரை 200 டிக்கெட்டுகள் வரை விற்றுத் தீர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதுவரை எந்த திரையரங்கிலும் இதுமாதிரி ஏற்பாடு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை

கோவை

மேலும் கோவை போன்ற நகரங்களிலும் தெறியை வரவேற்கும் விதமாக, விஜய் போலீஸ் கெட்டப்பில் இருப்பது போன்ற பிரமாண்ட கட்-அவுட்களை வைத்துள்ளனர்.படம் வெளியாக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் சேலம், சென்னை போன்ற பல்வேறு இடங்களிலும் தெறிக்கு முன்பதிவு இன்னும் தொடங்கப் படாமலேயே இருக்கிறது.


இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், வெளியாகும் திரையரங்குகளில் தெறியை வரவேற்க உற்சாகத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.English summary
Tirunelveli Fans Ready 140 Feet Cutout for Vijay's Theri Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil