»   »  ஸ்ரீதேவியின் 16-ஆவது நாள் சடங்கில் சென்னையில் அஜித்- ஷாலினி

ஸ்ரீதேவியின் 16-ஆவது நாள் சடங்கில் சென்னையில் அஜித்- ஷாலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியின் சடங்கில் அஜித்!- வீடியோ

சென்னை: மறைந்த ஸ்ரீதேவிக்கு அவரது சென்னை வீட்டில் நடந்த 16-ஆவது நாள் இறப்பு சடங்குகளில் அஜித்தும் ஷாலினியும் கலந்து கொண்டனர்.

துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் சென்றார் ஸ்ரீதேவி. அங்குள்ள ஹோட்டல் அறையில் உள்ள கழிவறை பாத்டப்பில் மூழ்கி இறந்துவிட்டார்.

16 th day rituals performed in Chennai Sridevi's house

அவரது அஸ்தி கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடலில் கரைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு இன்று 16-ம் நாள் சடங்கு நடத்தப்பட்டது.

இந்த சடங்கில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கெனவே ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஷாலினி மும்பை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ரீதேவியுடன் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் அஜித் நடித்திருந்தாலும் இருவரும் குடும்ப அளவில் நெருக்கமானவர்கள். அஜித், ஷாலினி இருவரும் ஸ்ரீதேவியிடம் வாரம் ஒருமுறை போனில் நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.

English summary
Sridevi who dies in accidental drowning in Dubai Hotel, 16th day rituals are performed in Sridevi's house in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X