For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொரோனாவின் போது எழுந்த சர்ச்சை… 16 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த எஸ்பி ஜனநாதன்… 16 இயர்ஸ் ஆஃப் ஈ

  |

  சென்னை: ஜீவா, நயன்தாரா, கருணாஸ், பசுபதி, ஆசிஸ் வித்யார்த்தில் நடிப்பில் 2006ல் வெளியான திரைப்படம் ஈ.

  மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ஈ திரைப்படம், மருத்துவ உலகின் பல மர்மங்களை உடைத்துப் பேசியது.

  கொரோனா பரவலின் போது மக்களிடம் எழுந்த பல சந்தேகங்களையும் ஈ படத்தில் பேசியிருந்தார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

   நயன்தாரா இல்லைன்னா ரச்சிதா.. பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து தேர்வு செய்த 2 ஹீரோயின்கள் இவங்கதான்! நயன்தாரா இல்லைன்னா ரச்சிதா.. பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து தேர்வு செய்த 2 ஹீரோயின்கள் இவங்கதான்!

  மக்களின் இயக்குநர்

  மக்களின் இயக்குநர்

  சினிமா பொழுதுபோக்கிற்கான ஊடகமாக அல்லாமல் ஏதோ ஒருவகையில் இந்த சமூகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தக் கருத்தை கூறியிருந்த மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், இதனை சொல்லோடு நிறுத்திவிடாமல் தனது படங்கள் மூலம் செயல் வடிவம் கொடுத்தவர். தான் பின்பற்றிய பொதுவுடமை சிந்தனையின் படி, தனது படைப்புகளும் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என உறுதியாக இயங்கினார். அதன்பொருட்டே அவர் இயக்கிய படங்கள் பொழுதுபோக்கிற்கும் அப்பாற்பட்டு சமூகத்திற்கான படைப்புகளாக கொண்டாடப்படுகின்றன.

  அசாத்தியமான படைப்புகள்

  அசாத்தியமான படைப்புகள்

  இந்த உலகம் இயற்கையால் இயற்கையாக உருவானது அல்ல, அது முழுக்க முழுக்க இயற்கைக்காகவே மட்டுமே படைக்கப்பட்டது. அதன்பிறகே இங்கே மனிதர்களுக்கும் இடமுண்டு, இயற்கையை அனுபவிக்கவும் அனுமதியுண்டு. இந்த உவமையை உள்ளார்ந்து உணர்ந்து தனது படங்களை இயக்கினார் எஸ்பி ஜனநாதன். சினிமா மூலம் அரசியல் சித்தாந்தத்தின் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என நினைப்பதே வியப்புக்குரியது. அதில் பல தடைகள் வந்தாலும் உறுதியாக திரையில் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதும் அல்ல. எஸ்.பி. ஜனநாதன் இதில் எந்த சமரசமும் இல்லாமல் தனது படங்களை இயக்கி வெற்றியும் கண்டார். குறிப்பாக சினிமாவிற்கு தேவையான கமர்சியலும், மானுட அறத்தை மீறாத தார்மீக பொறுப்பையும் அவரது படங்களில் கண்டிப்பாக இடம்பெறும்.

  மருத்துவ உலகின் மர்ம பக்கங்கள் ஈ

  மருத்துவ உலகின் மர்ம பக்கங்கள் ஈ

  இயற்கை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.பி. ஜனநாதன், அடுத்து 'ஈ' என்ற படத்தை இயக்கினார். திரையுலகில் இந்தப் படம் மிக முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது, காரணம் மருத்துவ உலகில் நடக்கும் மர்மங்களையும் சில அயோக்கியத்தனங்களையும் இவ்வளவு துணிச்சலாக பேசிய ஒரே படம் என்றால் அது ஈ மட்டும் தான். பயோ - கெமிக்கல் ஆயுதங்கள், அதன் மூலம் நடக்கும் உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளோடு படத்தின் டைட்டில் திரையிடப்படும். காதல், காமெடி, கலாட்டா என சில கமர்சியல் மசாலத்தன்மையோடு பயணிக்கும் ஈ படத்தின் கதை,. யாரும் எண்ணிக்கூட பார்த்திராத வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

  இந்தியாவின் ஒரிஜினல் முகம்

  இந்தியாவின் ஒரிஜினல் முகம்

  கெமிக்கல் ஆயுதங்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகளாக ஏழைமக்கள் வசிக்கும் நாடுகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை இப்படத்தின் மூலம் பேசினார் எஸ்.பி. ஜனநாதன். ரொம்பவே அழுத்தமான அரசியல் களத்தை தனது எளிமையான சினிமா மூலம் அதகளப்படுத்தினார். குறிப்பாக இந்தியா வளரும் நாடு இல்லை, அது ஏழை நாடாகாவே சர்வதேச மருத்துவ சந்தையில் பார்க்கப்படுகிறது என மெல்லிய அடிக்கோடிட்டு காட்டியிருப்பார். மக்களுக்காக போராட தன் பிறப்புக்கே தகுதியில்லை என நாயகன் ஜீவா சொல்லும் காட்சியில், "நீ பொறந்த சாதி தெரிஞ்சிருந்தா சாதிசங்கத் தலைவன் ஆயிருப்பே, நீ பொறந்த மதம் தெரிஞ்சிருந்தா மத வெறியன் ஆயிருப்பே... நீ தேவடியா மகனா பொறந்ததே பெரிய தகுதி தாண்டா" என பசுபதியின் பாத்திரம் மூலம் அவர் அளித்த விளக்கம் சமரசமில்லாத காரம் எனலாம்.

  கொரோனா பரவலும் சந்தேகங்களும்

  கொரோனா பரவலும் சந்தேகங்களும்

  ஈ படத்தின் கதைக்களத்தை எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால், 2019ல் உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பரவலை நினைவில் கொள்ளலாம். சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப் படைத்தது. இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற எந்த பாகுபாடுகளும் இல்லாமல் பலரது உயிரையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடியது. அப்போது சர்வதேச அளவில் எழுந்த மிக முக்கியமான வாதம், "மருத்துவ பரிசோதனைக்காக கொரோனா வைரஸ் செயற்கையாகவே மக்களிடம் பரப்பப்பட்டுள்ளதா அல்லது வல்லரசு நாடுகள் மருத்துவத் துறையில் தங்களது பலத்தை காட்ட கொரோனாவை பயன்படுத்திக் கொண்டதா" என்பது தான். இந்த சந்தேகத்தையும் இதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் தான் தனது ஈ படத்தில் பேசினார் எஸ்பி ஜனநாதன். அதுவும் 2006ம் ஆண்டிலேயே மருத்துவத்துறையில் நடக்கும் வர்க்க சுரண்டலை வெளிப்படையாகப் பேசினார்.

  English summary
  SP Jananathan directed E movie was released in 2006. Jiiva, Nayanthara, Pasupathy, and others acted in this film. It has been 16 years since the release of the movie E, which broke many mysteries of the medical world.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X