For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஜய் சொல்லியடிச்ச கில்லி.. கபடி கேப்டன் வேலு, முத்துப்பாண்டியை காலி பண்ணி 16 வருஷம் ஆகுது!

  |

  சென்னை: தளபதி விஜய் நடிப்பில் எத்தனை படங்கள் ரிலீசானாலும், என்றுமே கில்லி படம் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஃபேவரைட் படம் தான்.

  Wow! விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்| Jason Sanjay | Lock Down

  தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ரிலீசான படம் கில்லி.

  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். சூரத்தேங்கா அட்றா அட்றா, அர்ஜுனர் வில்லு, அப்படிப் போடு, கொக்கர கொக்கரக்கோ என அனைத்து பாடல்களும் இன்று வரை ரசிகர்கள் மனங்களில் நிறைந்து இருக்கிறது.

  ரத்த சிவப்பு டிரெஸ்சில் ஹன்சிகா.. ஏன் இப்படி ஒல்லியாயிட்டீங்க? பாந்தமாக உருகும் பாசக்கார ஃபேன்ஸ்!ரத்த சிவப்பு டிரெஸ்சில் ஹன்சிகா.. ஏன் இப்படி ஒல்லியாயிட்டீங்க? பாந்தமாக உருகும் பாசக்கார ஃபேன்ஸ்!

  தெலுங்கு ரீமேக்

  தெலுங்கு ரீமேக்

  2003ம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபு, பூமிகா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ஒக்கடு. அந்த படத்தை பார்த்து பிடித்துப் போன நடிகர் விஜய் தமிழில் அந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தார். தரணி இயக்கத்தில் அடுத்த வருஷமே கில்லி படம் தமிழில் வெளியானது.

  கபடி வீரர்

  கில்லி படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். அந்த அளவுக்கு ஒரு கம்ப்ளீட் கமர்ஷியல் என்டர்டெயினர் படமாக கில்லி இருக்கிறது. வேலு எனும் கபடி வீர்ராக நடிகர் விஜய், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட், நடனம், கபடி என அனைத்திலும் ரவுண்டு கட்டி நடித்திருப்பார்.

  தரணி

  தரணி

  மம்மூட்டி, நெப்போலியன் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தரணி. 2001ம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான தில் படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ந்து சியான் நடிப்பில் 2003ல் வெளியான தூள் படம் ஹிட்டான நிலையில், 2004ல் கில்லி படத்தை இயக்கும் வாய்ப்பு தரணிக்கு கிடைத்தது.

  முத்துபாண்டி

  முத்துபாண்டி

  கில்லி படம் என்றாலே எப்படி தளபதி விஜய் நினைவுக்கு வருகிறாரோ அதே அளவுக்கு வில்லன் முத்துப்பாண்டியாக நடித்த பிரகாஷ்ராஜும் ரசிகர்கள் நினைவுக்கு கட்டாயம் வருவார். தனலக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவை பார்த்து ஐ லவ் யூ செல்லம் என பிரகாஷ் ராஜ் சொல்லும் வசனத்தை பல ரசிகர்களும் டப்ஸ்மேஷ், டிக் டாக் என செய்திருப்பார்கள்.

  50 கோடி வசூல்

  தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை நடிகர் விஜய்யின் கில்லி அசத்தலாக படைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தமிழ் சினிமாவில் செய்திருந்த வசூல் சாதனை விஜய்யின் கில்லி படம் கடந்து புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

  டிரெண்ட்

  கில்லி படம் ரிலீசாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை விஜய் ரசிகர்கள் #16YearsOfBlockbusterGhilli என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஏரியா, அந்த ஏரியா என ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி தான் என விஜய் சொல்வது போலவே, டிரெண்டிங்கிலும் கில்லி கெத்து காட்டி வருகிறது.

  200வது நாள்

  ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கில்லி படம் 200 நாட்களை கடந்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. கில்லி படத்தின் 200வது நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு படக்குழுவினருக்கு விருதுகளை வழங்கியது எல்லாம் மறக்க முடியாத கில்லி மெமரீஸ்.

  English summary
  Vijay’s mega blockbuster movie Ghilli surpassed 16 years of its release. Thalapathy fans celebrate 16 years of Ghilli in high mode.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X