»   »  2வது கோல்டன் குளோப் விருது வாய்ப்பு ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு நழுவியது!

2வது கோல்டன் குளோப் விருது வாய்ப்பு ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு நழுவியது!

By Sudha
Subscribe to Oneindia Tamil
A R Rahman
2வது முறையாக கோல்டன் குளோப் விருது பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்ப ட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அந்த விருதை, மயிரிழையில் நழுவ விட்டுள்ளார். தி சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு விருது போய் விட்டது.

முதல் முறையாக 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதைப் பெற்று சாதனை படைத்திருந்தார் ரஹ்மான். இதையடுத்து அதே படத்திற்காக அவருக்கு 2 ஆஸ்கர் விருதுகளும் தேடி வந்தன.

இந்த நிலையில் தற்போது அவர் இசையமைத்துள்ள 127 ஹவர்ஸ் படமும் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று அறிவிக்கப்பட்ட 16வது விமர்சகர்கள் விருது விழாவில், 127 ஹவர்ஸ் படத்தில் இடம் பெற்ற இஃப் ஐ ரைஸ் பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு ரஹ்மானுக்கு விருது கிடைத்தது. இதையடுத்து கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுக்கான வாய்ப்புகள் அவருக்குப் பிரகாசமாகின.

ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட கோல்டன் குளோப் விருதில் ரஹ்மான் அதை 'மிஸ்' செய்துள்ளார். தி சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு அந்த விருது கிடைத்துள்ளது.

லாஸ் ஏஞ்சலெஸில் இன்று நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதை சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு இசையமைத்த டிரென்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ராஸ் ஆகியோர் பெற்றனர்.

இதன் மூலம் 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை ரஹ்மான் நழுவ விட்டுள்ளார்.

நைன் இன்ச் நெய்ல்ஸ் என்ற ராக் குரூப்பில் இடம் பெற்றுள்ள முன்னணி இசையமைப்பாளர்தான் தற்போது கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ரெஸ்னர். இதுதான் அவர் இசையமைத்துள்ள முதல் படமாகும். முதல் படத்திலேயே விருதைப் பெற்றுள்ளார்-ரஹ்மானைப் போல. விருது பெற்றதும் அவர் கூறுகையில், ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று ஒரு வருடத்திற்கு முன்பு வரை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இந்த விருது எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கிறது என்றார் ரெஸ்னர்.

இசைப் புயல் ரஹ்மான் கடந்த ஆண்டு கப்பிள்ஸ் ரீட்ரீட் என்ற படத்தில் இடம் பெற்றிருந்த நா நா என்ற பாடலுக்கா ஒரிஜினல் பாடல் பிரிவில், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு நாமினேஷன் கிடைக்கவில்லை. இதுதான் ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கு.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப் மற்றும் கிராமி விருதுகளைத் தட்டிச் சென்று புதிய சாதனை படைத்தவர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் குளோப் நழுவியுள்ள நிலையில் அடுத்து ஆஸ்கர் விருதைப் பெறுவாரா ரஹ்மான் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Oscar-winning Indian musician A R Rahman lost out the Golden Globe in the Original Score category to Trent Reznor and Atticus Ross, who won for their music in 'The Social Network'. The 45-year-old musician was up for his second Golden Globe for the Danny Boyle film '127 Hours' and had just a day earlier bagged the best original song trophy at the 16th Critics' Choice Awards for his number 'If I Rise' from the film. The musician who had won his first Golden Globe in 2009 for another of the British director's film, 'Slumdog Millionaire', is in the running for his second Oscar with the song, which is a collaboration between him and British popstar Dido. The 'Mozart of Madras' had won two Oscars for his score in 'Slumdog Millionaire' at the 2009 Oscars, taking the film's total haul to eight. His song 'Na Na' from his Hollywood debut venture Couple's Retreat, was longlisted in the 'Best Original Song' category at the 2010 Oscars but failed to win a nomination.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more