»   »  சிறிய பட்ஜெட் படங்கள்: தேர்வு செய்து மானியம் வழங்க குழு அமைப்பு

சிறிய பட்ஜெட் படங்கள்: தேர்வு செய்து மானியம் வழங்க குழு அமைப்பு

By Chakra
Subscribe to Oneindia Tamil

சென்னை: குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்களுக்கு மானியம் வழங்க படங்களைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2007, 2008, 2009, மற்றும் 2010ம் ஆண்டுகளில், குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்குத் தகுதியுடைய தரமான திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக, நீதிபதி பொன்.பாஸ்கரன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன், சென்னைத் தொலைக்காட்சி நிலைய ஓய்வுபெற்ற இயக்குநர் அ.நடராஜன், திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர், திரைப்பட நடிகைகள் சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா,

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், வணிகவரித்துறை இணை ஆணையர், உள்துறை துணைச் செயலாளர் (சினிமா), எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The Tamil Nadu government has set up committee to short-list the best low-budget films. According to a press release, a panel headed by Justice Pon Bhaskaran will select low-budget films produced over a four-year period from 2007 to 2010. Producer-director Rama Narayanan, retired Doordarshan director A Natarajan, actor Vagai Chandrashekar, actresses Saroja Thangavelu and Sripriya, and other government officials are members of the committee.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more