twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமராஜர் பிறந்த நாளில் வரும் 'முதல்வர் மஹாத்மா'!

    By Shankar
    |

    மகாத்மா காந்தி இம்மண்ணுலகிலிருந்து மறைந்த பிறகுதான் சமூக - அரசியலில் அவரது தாக்கம் பல்வேறு பரிமாணங்களில் அலசப்பட்டு வருகிறது.

    காந்திய நடைமுறை இன்றைய உலகுக்கு எந்த அளவு சாத்தியம் என சினிமாக்கள் வழி சொல்லி வருகிறார்கள். இந்தப் பார்வையுடன் வந்த 'முன்னாபாய்' வரிசைப் படங்கள் மக்களின் மனங்களைத் தொட்டு, வசூலையும் குவித்தது நினைவிருக்கலாம்.

    இப்போது தமிழிலும் மகாத்மா காந்தியின் தாக்கம் குறித்து திரைப்படம் ஒன்று உருவாகிறது. அதுதான் முதல்வர் மகாத்மா.

    காமராஜ எனும் அற்புத திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் அ.பாலகிருஷ்ணன்தான் இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார்.

    மகாத்மாவின் உண்மையான சீடராக வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15-ந் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

    இந்தப் படம் குறித்து இயக்கநர் அ பாலகிருஷ்ணன் பேசுகையில், "இந்திய நாட்டின் சுதந்திரம் மட்டுமே காந்தியின் கனவல்ல. உலக நாடுகளுக்கெல்லாம் முன் மாதிரியாக இந்தியா திகழ வேண்டும் என்பதே அவருடைய மாபெரும் கனவாக இருந்தது.

    ஆனால், அவரது கனவை நிராசையாக்கிவிட்டு, தவறான திசையில் வெகுதூரம் சென்றுவிட்டது, இந்தியா. அதிகாரத்தில் உள்ளோரிடம் அறவுணர்வும், தார்மீக நெறிகளும் இல்லாது போய்விட்டது.

    மகாத்மா மீண்டும் வந்தால்...

    இந்த நிலை கண்டு காந்தியின் ஆன்மா கலங்குவதுதான் படத்தின் கருப்பொருளாக்கப்பட்டு இருக்கிறது. இறைவனிடம் அனுமதி பெற்று மீண்டும் மஹாத்மா இந்த மண்ணுக்கு வந்தால்...? இந்த கற்பனைதான் மனதை நெகிவ வைக்கும் காட்சிகளாக வந்துள்ளன.

    காந்தி மீண்டும் பூமிக்கு வந்தபின், நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டுத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பது பற்றி இந்த படம் பேசுகிறது.

    அனுபம்கெர்

    இதில், முக்கிய பாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அனுபம்கெர் நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, 'அரசியல் கொந்தளிப்பான இன்றைய காலகட்டத்தில், இந்த படம் தமிழக மக்களை மட்டுமல்ல, இந்தியாவில் அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும்'' என்றார்.

    பாராட்டிய இளையராஜா

    'முதல்வர் மஹாத்மா' படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டுள்ளதால், பிரபல வட இந்திய இசைக் கலைஞர்களையும் பின்னணி இசை சேர்ப்பில் இணைத்துக்கொண்டார், இளையராஜா. இந்த படத்துக்கு ஆத்மார்த்தமாக இசையமைத்த அவர், 'இது இன்னொரு கட்டத்துக்கு போகிற படம்' என்று பாராட்டினார்.

    படத்தில் காந்தியாக நடித்திருப்பவர் கனகராஜ். மகாத்மாவின் தோற்றத்துக்கு வெகு பொருத்தமாக சிறப்பாக நடித்துள்ளார்,'' என்றார்.

    English summary
    Meendum Mahatma is the new movie based on the resurrection of our Father of the Nation. According to the director A Balakrishnan, the film would be released on Perunthalaivar Kamarajar's birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X